மாருதியின் ஆல்ட்டோ 800 காரின் உற்பத்தி நிறுத்தம்

0

Maruti Alto 800

12 ஆண்டுகாலமாக இந்தியாவின் பெஸ்ட் கார் மாடலாக விளங்கிய மாருதி சுசூக்கி ஆல்ட்டோ 800 காரின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 800சிசி மற்றும் 1.0 லிட்டர் என இரு என்ஜின்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Google News

தற்போது புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ ப்யூச்சர் எஸ் (Future S) காரினை தயாரித்து வருகின்றது. இந்த புதிய மாடல் ஜூன் மாத மத்தியில் விற்பனைக்கு வெளியிட மாருதி சுசூக்கி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக இருப்பில் உள்ள ஆல்ட்டோ கார்களை விற்பனை செய்யும் நோக்கில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் 800சிசி என்ஜின் பெற்ற மாடல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த என்ஜினை மாருதி நிறுவனம் நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாருதி 800 கார் முதல் தற்போதைய ஆல்ட்டோ, ஆம்னி வரை இடம்பெற்று வந்த என்ஜினை கைவிட முடிவெடுத்துள்ளது. இதன் கராணமாக இனி வரும் ஆல்ட்டோ கார்களில் 1 லிட்டர் என்ஜின் மட்டும் பொருத்தப்பட்டிருக்கலாம்.

மாருதியின் ஆல்ட்டோ காரின் விற்பனை எண்ணிக்கை 10 லட்சம் என்ற மைல்கல்லை கடந்த 2008 ஆம் ஆண்டும், 15 லட்சம் விற்பனை எண்ணிக்கை சாதனை கடந்த 2010 ஆம் ஆண்டும் கடந்தது. அதன்பின், கடந்த 2018 ஆம் ஆண்டில், 35 லட்சம் விற்பனை எண்ணிக்கை கடந்து சாதனை படைத்துள்ளது.