Automobile Tamilan

2020-ல் மாருதியின் முதல் மின்சார வாகனம் அறிமுகம்

இந்தியாவின் முதன்மையான நான்கு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசுகி அடுத்த இரண்டு ஆண்டுகளில் முதல் மின்சார வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக மாருதி சுசூகி சேர்மென் ஆர்.சி. பார்கவா தெரிவித்துள்ளார்.

மாருதி சுசூகி மின்சார கார்

வருகின்ற 2030 ஆம் ஆண்டு முதல் மின்சார வாகனங்களை நாடு முழுவதும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் , முதல் மின்சார காரை 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்வதற்கான திட்டங்களை மாருதி சுசூகி ஆராய தொடங்கியுள்ளது.

மாருதி நிறுவனத்தின் வசம் எவ்விதமான எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் நுட்பத்தை பற்றி எவ்விதமான ஆதாரமும் இல்லாத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சுசூகி மற்றும் டொயோட்டா கூட்டணியில் உருவாக்கப்பட உள்ள மின்சார கார் சார்ந்த நுட்பத்தை மாருதி நிறுவனம் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய உள்ளதாக பார்கவா தெரிவித்துள்ளார்.

மாருதி நிறுவனம் மின்சார கார் தயாரிப்பிற்கான முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ள நிலையில் 2018 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத முடிவில் தயாராக உள்ளதால் அதனை தொடர்ந்த ஹேட்ச்பேக் அல்லது செடான் ரக மின்சார கார் உற்பத்திக்கு என பிரத்யேக அடிப்படை கட்டுமானம் மற்றும் வாகன தயாரிப்பை மேம்படுத்த மாருதி சுசூக்கி திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் மின்சார கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. மேலும் டாடா மோட்டார்ஸ் மத்திய அரசின் பனிகளுக்கு மின்சார வாகனத்தை விற்பனை செய்ய 10,000 கார்களுக்கான ஏலத்தை கைப்பற்றியுள்ளது.

Exit mobile version