மாருதி சுஸுகி கார் உற்பத்தி 18 சதவிகிதம் சரிவு.!

wagonr

இந்தியாவின் முதன்மையான கார் உற்பத்தியாளரான மாருதி சுஸுகி நிறுவனம், கடந்த மே மாதம் உற்பத்தி 18.1 விழுக்காடு வரை சரிவடைந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து வாகன விற்பனை எண்ணிக்கை இந்தியளவில் பெருமளவு சரிவினை சந்தித்து வருகின்றது. குறிப்பாக மக்களவைத் தேர்தல், பொருளாதர மாறுபாட்ட நிலை மற்றும் நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால் சரிவடைந்துள்ளது.

மாருதி சுஸுகி உற்பத்தி சரிவு

கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சரிவினை ஏப்ரல் மாதம் மாதந்திர விற்பனை எண்ணிக்கை பதிவு செய்துள்ளது. அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில், மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த உற்பத்தி கடந்த 2018 மே மாதம் 1,84,612 எண்ணிக்கை ஆக இருந்தது. ஆனால் மே 2019 உற்பத்தி எண்ணிக்கை 1,51,188 ஆக பதிவு செய்து 18.1 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது.

சூப்பர் கேரி மினி டிரக்கினை தவிர்த்து பிரபலமான ஆல்ட்டோ முதல் விட்டாரா பிரெஸ்ஸா கார் வரை சரிவினை கண்டுள்ளது. ஆல்ட்டோ உள்ளிட்ட சிறிய ரக கார் உற்பத்தி 42.79 சதவிகித சரிவை கண்டுள்ளது. கடந்த மே 2018-ல் 41,373 கார்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், மே 2019-ல் 23,874 ஆக இருந்துள்ளது.