10 லட்சம் கார்கள் ஏற்றுமதி இலக்கை கடந்த குஜராத் மாருதி சுசுகி

0

dzire

மாருதி சுசுகி டிசையர் மாடல் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள முந்தரா துறைமுகத்திலிருந்து தென்அமெரிக்காவின் சிலி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள 10,00,000 காரின் உற்பத்தியை இந்நிறுவனம் கடந்துள்ளது. முந்தரா மற்றும் மும்பை என இரு துறைமுகத்திலிருந்து சுமார் 125 நாடுகளுக்கு கார்களை மாருதி ஏற்றுமதி செய்து வருகின்றது. மொத்தமாக இதுவரை 18 லட்சத்துக்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

Google News

முந்தரா துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ள 1 மில்லியன் காரான டிசையர், சிலி நாட்டிற்கு விற்பனைக்கு செல்ல உள்ளது. இந்த துறைமுகத்திலிருந்து லத்தீன் அமெரிக்கன், சில கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய சந்தைக்கு முக்கிய ஏற்றுமதி மையமாக திகழ்கின்றது.

ஏற்றுமதி மைல்கல்லைப் பற்றி கருத்து தெரிவித்த மாருதி சுசுகி இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கெனிச்சி அயுகாவா, “முந்தராவிலிருந்து ஏற்றுமதி தொடங்கி ஒரு தசாப்தத்திற்குள், ஒரு மில்லியனுக்கும் அதிகமான காரை அனுப்பும் குறிப்பிடத்தக்க மைல்கல்லை நாங்கள் அடைந்தோம். மாருதி சுசுகி நிறுவனம், மாறிவரும் சந்தைக் வேகத்தைத் தக்கவைக்க எங்கள் ஏற்றுமதி தொடர்ந்து நாங்கள் எப்போதும் சீரமைத்துள்ளோம். மாருதி சுசுகியின் தரம், பாதுகாப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தரங்களை பூர்த்தி செய்யும் கார்களை உற்பத்தி செய்து இந்தியாவின் திறனை பிரதிபலிக்கின்றன.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இந்த துறைமுகத்திலிருந்து கார்களை ஏற்றுமதி செய்து வரும் இந்நிறுவனம் PDI மையத்தை இங்கே கொண்டுள்ளது. மேலும், மாருதி இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற 14 மாடல்களை ஏற்றுமதி செய்கின்றது. செலிரியோ, பலேனோ, இக்னிஸ், ஆல்டோ கே10 மற்றும் டிசையர் போன்ற மாடல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றது.