Automobile Tamil

4.7% வரை கார் விலையை உயர்த்துவதாக அறிவித்த மாருதி சுசுகி

maruti alto

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம, தனது குறிப்பிட்ட சில மாடல்களின் விலை அதிகபட்சமாக ரூபாய் 10,000 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. விலை உயர்வு இன்றைக்கு ஜனவரி 27 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. விலை உயர்வுக்கான காரணம் உற்பத்தி மூலப் பொருட்களின் விலையே என குறிப்பிட்டுள்ளது.

தொடக்க நிலை மாடல் ஆல்ட்டோ காரின் விலை ரூ.6,000-9,000 வரை, எஸ்-பிரஸ்ஸோ ₹ 1,500 முதல் 8,000 வரை, வேகன்ஆர் ₹ 1,500 முதல் 4,000 வரை உயர்ந்துள்ளது.

இந்நிறுவனம் தனது எம்பிவி ரக மாடலான எர்டிகாவின் விலையை ரூ. 4,000-10,000 வரையிலும், பலேனோ ₹ 3,000 முதல் 8,000 வரையிலும், எக்ஸ்எல் 6 காரின் விலையை 5,000 வரையிலும் அதிகரித்துள்ளது (அனைத்து விலைகளும் எக்ஸ்ஷோரூம் டெல்லி).

தற்போது, நிறுவனம் நுழைவு நிலை சிறிய கார் ஆல்டோ முதல் பிரீமியம் பல்நோக்கு வாகனம் எக்ஸ்எல் 6 வரையிலான வாகனங்களை ரூ. 2.89 லட்சம் முதல் ரூ. 11.47 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விற்பனை செய்கிறது.

Exit mobile version