26 சதவித வளர்ச்சி பெற்ற மாருதி சுசூகி கார் விற்பனை நிலவரம்

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி இந்தியா, கடந்த மே மாதந்திர மொத்த விற்பனையில் சுமார் 1,72,512 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ள மாருதி நிறுவனம், முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 26 சதவித வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளராக மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் விளங்குகின்றது.

மாருதி சுசூகி இந்தியா

மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனையில் மொத்தமாக 1,72,512 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இதே ஆண்டு முந்தைய வருடத்துடன் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 1,36,962 எண்ணிக்கையை பதிவு செய்து கூடுதலாக 26 சதவித வளர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் டிசையர், ஸ்விஃப்ட், மற்றும் பலேனோ ஆகியவற்றுடன் விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா கார்கள் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகின்றது.

இந்தியாவில் மாருதி சுசூகி கார் தயாரிப்பாளர், உள்நாட்டில் முந்தைய வருடத்துடன் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 24.9 சதவித வளர்ச்சி பெற்று 1,63,200 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. அதே போல ஏற்றுமதி சந்தையில் முந்தைய வருடத்துடன் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 48.1 சதவித வளர்ச்சி பெற்று 9,312 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

குறிப்பாக இந்நிறுவனத்தின் காம்பேக்ட் ரக கார் மாடல்களின் விற்பனை அதிகரித்திருப்பதுடன், யுட்டிலிட்டி ரக மாடல்களான விட்டாரா பிரெஸ்ஸா, ஈக்கோ மற்றும் ஆம்னி ஆகிய மாடல்கள் விற்பனையில் அபரிதமான வளர்ச்சி பெற்று விளங்குகின்றது. இந்நிறுவனத்தின் தொடக்க நிலை மாடல்களான ஆல்டோ மற்றும் வேகன் ஆர், செடான் ரக சியாஸ் ஆகியவற்றின் விற்பனை சரிவினை கண்டுள்ளது.

 

 

Exit mobile version