Home Auto Industry

நாட்டில் 450வது டிரைவிங் ஸ்கூலை திறக்கிறது மாருதி சுசூகி

வரும் 2020ம் ஆண்டுக்குள் 1.5 மில்லியன் மக்களுக்கு தரமான டிரைவின் திறன் பயிற்சியை மாருதி ஓட்டுனர் பள்ளி மூலம் அளிக்க நாட்டின் மிகபெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக சுசூகி இந்தியா லிமிட்டெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மாருதி சுசூகி தனது டீலர்களுடன் இணைந்து மாருதி ஓட்டுனர் பள்ளிகளை உருவாக்கியுள்ளது.

மாருதி ஓட்டுனர் பள்ளிகளில், இந்திய டிரைவிங் கண்டிசனுக்கு ஏற்ற வகையிலானடிரைவிங் ஸிமுலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. பயிற்சிக்காக வடிவமைக்கப்படத் வாகனத்திலேயே பிராக்டிக்கல் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி இந்த பயிற்சியில் கிளாஸ் தியரி அடிப்படையிலான சயிண்டிபிக் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பாட திட்டத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.

மாருதி ஓட்டுனர் பள்ளி பயிற்சியாளர்கள் மாருதி சுசூகி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கும் முறையை தெளிவாக கற்றவர்களாக இருப்பார்கள். அது மட்டுமின்றி இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிரைவிங் பயிற்சி குறித்த பயிற்சிகள் தோடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கமே, அவர்கள் மக்களுக்கு தரமான பயிற்சியை வழங்க செய்வதேயாகும்.

இதுமட்டுமின்றி கூடுதலாக மாருதி ஓட்டுனர் பள்ளி, மாருதி சுசூகி ஆகியவை ஏழு டிரைவிங் இன்ஸ்டிடியூட்களை நிர்வாகம் செய்வதுடன் போக்குவரத்து ஆராய்ச்சிகளையும் நாட்டின் பல்வேறு மாவட்ட அரசுகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆராய்ச்சிகள், டிரைவிங் பயிற்சியின் தரத்தை உருவாக்குவதுடன், டிரைவிங் ஸ்டுமேலேடர் மற்றும் டிரைவிங் அறிவுரைகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை பிரபலப்படுத்தவும் முடியும்.

Exit mobile version