Site icon Automobile Tamilan

சூப்பர் கேரி வாகனங்களை திரும்ப பெற்றது மாருதி சுசூகி நிறுவனம்

மாருதி சுசூகி நிறுவனம் தனது கமர்சியல் வானகமான சூப்பர் கேரி வாகனத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த வாகனங்களில் எரிபொருள் பம்ப் அசெம்ப்ளிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த நடவடிக்கையை மருதி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. உள்ளூர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட 640 வாகனங்கள், குறிப்பாக 2018 ஜனவரி மாதம் 20ம் தேதி முதல் 2018 ஜூலை 14ம் தேதி வரையிலான காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப பெறப்படுகிறது.

இந்த வாகனங்களை வாங்கியுள்ள உரிமையாளர்களை கடந்த மூன்றாம் தேதி நிறுவனத்தின் டீலர்கள் தொடர்பு கொண்டு, இந்த தவறாக பொருத்தப்பட்ட பாகங்களை மாற்றியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். இந்த மாற்றியமைக்கும் பணிகள் இலவசமாகவே செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோளாறை மாற்றி கொள்ள, வாகன உரிமையாளர்கள், நிறுவனத்தின் இணையதளத்தில் தங்கள் வாகனத்தின் 14 இலக்க சேஸ் நம்பரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூப்பர் கேரி வாகனங்கள், 793cc ஆற்றலுடன் 2 சிலிண்டர் டீசல் இன்ஜின் கொடுன் 32BHP மற்றும் 75Nm டார்க்யூ மற்றும் 5-ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டுள்ளது. இவை 740Kg வரையிலான லோடுகளை ஏற்றி செல்லும்.

Exit mobile version