ஜூலை 2019-ல் மாருதி சுசுகி கார் விற்பனை 36 % வீழ்ச்சி

maruti wagon r

இந்தியாவின் முதன்மையான பயணிகள் கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை ஜூலை 2019 மாத முடிவில் 36.3 % வீழ்ச்சியை உள்நாட்டில் பதிவு செய்துள்ளது. மேலும் ஏற்றுமதி சந்தையில் 9.4 சதவிகிதம் வீழ்ச்சியை கண்டுள்ளது.

கடந்த 2018 நவம்பர் மாதம் முதல் இந்திய ஆட்டோமொபைல் சந்தை கடுமையான தொடர் விற்பனை சரிவினை சந்தித்து வருகின்ற நிலையில் , மார்ச் 2019-ல் மாருதியின் மாதந்திர விற்பனை வீழ்ச்சி 1.45 சதவீதமாக தொடங்கியது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

ஜூலை 2019 மாத விற்பனை முடிவில் சுமார் 98 ஆயிரத்து 210 கார்கள் மட்டும் விற்பனை செய்துள்ளது. ஆனால் இதே காலட்டத்தில் கடந்த ஜூலை 2018 மாத விற்பனையில் மாருதி நிறுவனம் உள்நாட்டில் சுமார் 1 லட்சத்து 54 ஆயிரத்து 150 கார்களை விற்பனை செய்திருந்தது. இது முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 36.3 சதவீத வீழ்ச்சியாகும்.

மேலும் இந்நிறுவனம் விற்பனை செய்கின்ற ஆல்ட்டோ முதல் எஸ் கிராஸ் வரை அனைத்து மாடல்களின் விற்பனையிலும் கடும் பாதிப்புள்ளது. குறிப்பாக சிறிய ரக ஆல்ட்டோ இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற மாடலாக விளங்கும் ஆல்ட்டோ ஜூலை மாதம் 11 ஆயிரத்து 577 யூனிட்டுகள் மட்டும் விற்பனை ஆகியுள்ளது.

மற்ற மாடல்களில் மாருதி வரத்தக வாகனமான சூப்பர் கேரி மட்டும் முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 0.5 சதவீத வளர்ச்சி பெற்ற ஆயிரத்து 732 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் மாருதி பலேனோ அடிப்படையில் தயாரிக்கப்படுகின்ற டொயோட்டா கிளான்ஸா கார் விற்பனை எண்ணிக்கை ஆயிரத்து 796 ஆக உள்ளது.

ஜூலை 2019-யில் மொத்த ஏற்றுமதி 9.4 சதவீதம் குறைந்து எண்ணிக்கை 9 ஆயிரத்து 258 யூனிட்டுகளாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இது 10 ஆயிரத்து 219 ஆக இருந்தது.

Exit mobile version