18 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த மாருதி சுசூகி FY’19

2018-2019 ஆம் நிதி ஆண்டில் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், 4.7 சதவீதம் வளர்ச்சி அடைந்து 1,862,449 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2018 ஆம் நிதி வருடத்தில் 1,779,574 வாகனங்கள் மொத்தமாக விற்றிருந்தது குறிப்பிடதக்கதாகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நிதி வருடத்தில் உள்நாட்டில் மட்டும் மாருதி நிறுவனம், 1,753,700 வாகனங்களை விற்றுள்ளது. இதே காலகட்டத்தில் முந்தைய நிதி ஆண்டில் சுமார் 1,653,500 யூனிட்டுகளை விற்றிருந்தது.

மாருதி சுசூகி விற்பனை நிலவரம் – FY’19

தொடர்ந்து 7 ஆண்டுகளாக மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், பயணிகள் கார் விற்பனையில் வளர்ச்சி பாதையில் பயணித்து வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் சமீப காலமாக டிசையர், ஸ்விஃப்ட், பலேனோ , விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட மாடல்களுடன் புதிய வேகன்ஆர் கார் அபரிதமான விற்பனையை பதிவு செய்து வருகின்றது.

மாருதியின் சிறிய ரக கார்களுக்கான சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஆல்டோ மற்றும் பழைய வேகன்ஆர் என இரு மாடல்களும் பெரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. காம்பேக்ட் ரக மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்ற இக்னிஸ், புதிய வேகன்ஆர், பலேனோ மற்றும் டிசையர், ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை கனிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிறுவனத்தின் யூட்டிலிட்டி ரக வாகன மாடல்களின் விட்டாரா பிரெஸ்ஸா, எஸ் கிராஸ், எர்டிகா, போன்றவை விற்பனை அதிகரித்துள்ளது.

ஆனால் கடந்த மார்ச் 2019 மாதந்திர விற்பனை முடிவில் 1.6 சதவீதம் சரிவினை கண்டுள்ளது. கடந்த மார்ச் 2018-ல் 160,598 வாகனங்களை விற்றிருந்த நிலையில், இந்த வருடம் மார்ச் 2019-ல் 158,076 வாகனங்களை மட்டும் விற்பனை செய்துள்ளது.

 

Exit mobile version