5 ஆண்டுகளில் 6 லட்சம் ஆட்டோமேட்டிக் கார்களை விற்ற மாருதி சுசுகி

maruti s-presso

இந்தியாவின் முதன்மையான மாருதி சுசுகி பயணிகள் வாகனங்களில் மொத்தமாக 6 லட்சம் ஆட்டோமேட்டிக் கார்களை ஐந்து ஆண்டுகளில் விற்பனை செய்துள்ளது. 6 லட்சம் கார்களில் 5 லட்சம் ஏஜிஎஸ் எனப்படுகின்ற ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப்ட் கொண்ட மாடல்களாகும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதன்முறையாக மாருதியின் சிறிய ரக மாடலாக வெளியான செலிரியோ காரில் ஏஜிஎஸ் பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது தனது 12 மாடல்களில் ஏஜிஎஸ், சிவிடி மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோ என மூன்று விதமாக வழங்கி வருகின்றது.

ஆல்டோ கே -10, எஸ்-பிரஸ்ஸோ, வேகன்ஆர், செலெரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், டிசைர் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸாவில் ஏஜிஎஸ் கிடைக்கிறது. டார்க் கன்வெர்ட்டர் தானியங்கி கியர்பாக்ஸ் எர்டிகா, சியாஸ் மற்றும் எக்ஸ்எல் 6 ஆகியவற்றில் வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் பலேனோ காரில் சிவிடி தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.

6 லட்சம் விற்பனை சாதனை குறித்தான, மாருதி சுசுகி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கெனிச்சி அயுகாவா கூறுகையில், “மாருதி சுசுகி சிறந்த வாகன தொழில்நுட்பத்தை இந்திய சந்தையில் கொண்டு வர உறுதி பூண்டுள்ளது. இந்த மைல்கல் புதிய தொழில்நுட்பங்களை வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்வதை பிரதிபலிக்கிறது, இதன் மூலம் வாகனம் ஓட்டுவதையும் எளிதாக்குகிறது. பல தானியங்கி விருப்பங்களை வழங்குவதன் மூலம், பல்வேறு வாடிக்கையாளர்களை பிரிவுகளில் பூர்த்தி செய்ய முடியும். ” என குறிப்பிடுகிறார்.

மாருதி சுசுகி, அதன் தானியங்கி வாகனங்களுக்கான தேவை நாடு முழுவதும் பிரபலமாக உள்ளது. குறிப்பாக பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை, மற்றும் புனே சந்தைகளில் அதிகப்படியான வரவேற்பு உள்ளது.

Exit mobile version