Automobile Tamilan

எஸ் பிரெஸ்ஸா ஏற்றுமதியை துவங்கிய மாருதி சுசுகி

s-presso

குறைந்த விலை மைக்ரோ எஸ்யூவி காராக விளங்குகின்ற மாருதி எஸ் பிரெஸ்ஸா காருக்கு அமோகமான வரவேற்பினை இந்தியாவில் பெற்றுள்ளதை தொடர்ந்த சர்வதேச அளவில் விற்பனைக்கு கொண்டு செல்ல சுசுகி ஏற்றுமதி துவங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட்ட எஸ் பிரெஸ்ஸா காருக்கு அமோகமான வரவேற்பினை பெற்றிருக்கும் நிலையில் 35,000 க்கு மேற்பட்ட யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் குஜராத் மாநிலத்தின் ஆலையில் இருந்து ஏற்றுமதி துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எஸ் பிரெஸ்ஸோ கார்கள் லத்தின் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

எஸ்-பிரஸ்ஸோ காரில், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் K10B 1.0 லிட்டர் பொருத்தப்பட்டு பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையாக விளங்கும். 50 கிலோ வாட் (67.98 பிஎஸ்) அதிகபட்ச சக்தியை 5,500 ஆர்பிஎம் மற்றும் 90 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்-ல் வழங்கும். இந்த மாடலில் 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வழங்கப்படும்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 21.7 கிமீ ஆகும்.

Exit mobile version