விட்டாரா பிரெஸ்ஸா விற்பனை சாதனை – 1 லட்சம் எஸ்யூவிகள்

0

இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி நிறுவனத்தின் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலான விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனை 1 லட்சம் எண்ணிக்கையை கடந்து புதிய சாதனையை 11 மாதங்ளில் நிகழ்த்தியுள்ளது.

maruti suzuki vitara brezza side1

Google News

விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி

கடந்த மார்ச் 2016ல் விற்பனைக்கு வெளியிடப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடுதலான வசதிகள் போன்றவற்றை பெற்று விளங்குகின்றது. தற்பொழுது டீசல் இன்ஜின் மாடல்கள் மட்டுமே விற்பனையில் உள்ள நிலையில் புதிதாக பெட்ரோல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களும் வரவுள்ளது.

2 லட்சம் முன்பதிவுகளை சமீபத்தில் கடந்த விட்டாரா பிரெஸ்ஸா மாதந்தோறும் சராசரியாக 8500 கார்களுக்கு மேல் விற்பனையாகி வருகின்றது. தொடர்ந்துநல்ல வரவேற்பினை தக்கவைத்துள்ளதால் காத்திருப்புகாலம் 7 மாதங்கள் வரை உள்ளது.

maruti vitara brezza interior

லிட்டருக்கு 24.3 கிமீ மைலேஜ் தரும் காம்பேக்ட் ரக எஸ்யூவி காராக விளங்க உள்ள விட்டாரா பிரெஸ்ஸா காரில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது. 89 bhp ஆற்றலை வழங்கும் 1.3 லிட்டர் DDiS200 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 200NM ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. LDi, LDi (O), VDi, VDi (O), ZDi மற்றும் ZDi+ 6 விதமான வேரியண்ட் ஆப்ஷன்கள் உள்ளன.

மேலும்இந்தியாவின் முதல் கிராஸ் டெஸ்ட் சோதனையில் வெற்றி பெற்ற காராக பிரெஸ்ஸா தரசான்றிதழை பெற்றுள்ளது. மாருதியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள கிராஸ் டெஸ்ட் சோதனைகளுக்கான மையத்தில் சோதிக்கப்பட்டுள்ளது.

maruti vitara brezza fr