இந்தியாவில் பெட்ரோல்,டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுமா.!

petrol-diesel-vehicles

வரும் காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை தடை செய்ய அரசாங்கத்திடம் எந்தவொரு திட்டமும் இல்லை, அதே வேளையில் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் நோக்கில் மின்சார வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்த முக்கியவத்துவம் கொடுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

சுற்றுச் சூழல் பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக 2023 முதல் மூன்று சக்கர வாகனங்களில் எலெக்ட்ரிக் பவர் ட்ரெயின் மட்டும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும், 2025 முதல் 150 சிசி க்கு குறைவான இரு சக்கர வாகனங்கள் நீக்கப்பட்டு, மின்சார வாகனங்களை மட்டும் விற்பனை செய்ய நிதி அயோக் பரிந்துரைத்துள்ளது.

மேலும், 2030 ஆம் ஆண்டு முதல் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் விற்பனையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.

மத்திய அமைச்சர் கூறுகையில், நிலக்கரி மற்றும் எண்ணெயின் வழக்கமான எரிபொருள் ஆதாரங்கள் இந்தியாவின் தேவையில் 80 சதவீதத்திற்கும் கூடுதலான பங்களிப்பை கொண்டுள்ளது. மேலும் நாட்டின் பொருளாதாரம் விரிவடையும்  5 லட்சம் கோடி டாலராக உயர்த்த செயல் திட்டம் உள்ளது. அதனால் வரும் ஆண்டுகளில் எரிபொருள் தேவை அதிகரிக்கும். இன்னும் சில ஆண்டுகளில் அதிகம் எரிபொருள் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக விளங்கும், என்பதனால், இதற்கு இணையாக மின்சார சார்ந்த வாகனங்கள், சிஎன்ஜி போன்றவற்றை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த பெட்ரோலிய பொருட்களின் தேவை 211.6 மில்லியன் டன் ஆக இருந்தது. இதில் டீசல் நுகர்வு 83.5 மில்லியன் டன்னும், பெட்ரோல் 28.3 மில்லியன் டன்னும் ஆகும்.

Exit mobile version