தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல் விலை மாறும்..!

0

வரும்  ஜூலை 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல் விலை மாற்றியமைக்கப்படும்.

oil petrol diesel

Google News

காலை 6 மணிக்கு பெட்ரோல் விலை

டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 16 இன்று பெட்ரோல் பங்கு ஸ்டிரைக் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் நள்ளிரவு 12 மணிக்கு அமலாகும் புதிய விலை மாற்றம் பகலில் நடைபெற வேண்டும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தினமும் காலை 6 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது விலை நிர்ணய மாற்ற நேரம், மற்றும் பேராட்டம் வாபஸ் ஆகியவற்றில் உடன்பாடு ஏற்பட்டது.