1000 ரூபாய் வரை டூ வீலர் விலை உயருகின்றது : இ-செஸ் வரி

2019 bmw r 1250 gs

இ-செஸ் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதனால் ரூ.800 முதல் ரூ.1000 வரை பெட்ரோல் டூ வீலர் விலை உயரக்கூடும். இதன் மூலம் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிளுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.

இ-செஸ் வரி

green cess அல்லது இ-செஸ் என்ற பெயரில் விதிக்க திட்டமிட்டுள்ள வரி முறையில் வசூல் செய்ய திட்டமிட்டுள்ள வரியை மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலான மானியமாக வழங்க அரசு திட்டமிட்டு வருகின்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 21 மில்லியன் அல்லது 2.16 கோடி இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கையில் மின்சாரத்தில் இயங்கும் மாடல்கள் மிக குறைவாக உள்ளது. அடுத்த 2 முதல் 3 வருடங்களுக்குள் 10 லட்சம் பேட்டரி பைக் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

hero hf deluxe ibs side

பெட்ரோலில் இயங்கும் பைக்கிற்கும், மின்சாரத்தில் குறைந்த திறனில் இயங்கும் பைக்குகளுக்கு ஆன விலை வித்தியாசம் ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை உள்ளதால் , வாடிக்கையாளர்கள் மின்சார பைக்குகளை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர்.

பெரும்பாலான மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர்களுக்கு பொருத்தப்படுகின்ற பேட்டரி, மோட்டார், மற்றும் கன்ட்ரோலர் போன்றவை உள்நாட்டில் உற்பத்தி செயப்படாமல் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது. உள்நாட்டில் பேட்டரி, மின் மோட்டார் உள்ளிட்ட பாகங்களை உற்பத்தி செய்வதனால் விலை கனிசமாக குறையும் , இதனால் உற்பத்தி திறனை அதிகரித்து விற்பனை எண்ணிக்கை உயரும். இதனை கருத்தில் கொண்டு பெட்ரோலில் இயங்கும் டூ-வீலர்களுக்கு க்ரீன் செஸ் அல்லது இ செஸ் வரி விதிக்கப்பட்டு, இதில் பெறுகின்ற வரியை மின்சார வாகனங்களின் தயாரிப்பு கட்டமைப்பை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 1,2019 முதல் இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் மற்றும் சிபிஎஸ் பிரேக் கட்டாயம் என்பதனால், தற்போது ஏபிஎஸ் பிரேக் பொருத்தப்பட்ட 125சிசி மற்றும் அதற்கு கூடுதலான திறன் பெற்ற பைக்குகள் ரூ. 6000 முதல் அதிகபட்சமாக ரூ. 15,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. 125சிசி மற்றும் அதற்கு கீழ் உள்ள மாடல்களில் இடம்பெற உள்ள சிபிஎஸ் பிரேக் சேர்க்கப்படுவதனால் ரூ.3500 வரை அதிகபட்சமாக உயர்த்தப்படுகின்றது.

Okinawa i praise

மேலும் பிஎஸ் 6 நடைமுறை காரணமாக விலை கனிசமாக உயர்த்தப்படும், போன்ற காரணங்களுடன் மின் செஸ் வரி கூடுதலாக விதிகப்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே இரு சக்கர வாகனங்கள் கனிசமாக விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உதவி – இடிஆட்டோ