re-interceptor-650

6 மாதங்களாக தொடர் சரிவில் உள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல ராயல் என்ஃபீல்டு 2.0 மூலம் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என இந்நிறுவனம் நிர்வாக இயக்குநர் சித்தார்த் லால் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் முதல் பதவியேற்றுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய சிஇஓ வினோத் தாசரி, முன்பாக 14 ஆண்டுகள் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக விளங்கியவர் ஆவார்.

ராயல் என்ஃபீல்டு 2.0

உலகின் நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையின் மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்கும் ராயல் என்ஃபீல்ட் விற்பனை கடந்த ஏப்ரல் மாதம் முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 21 சதவீதம் சரிவினை கண்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் தொடர் சரிவினை என்ஃபீல்டு கண்டு வருகின்றது.

மணி கன்ட்ரோல் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் ஐஷர் மோட்டார்ஸ் தலைவர் சித்தார்த் லால் அளித்த பேட்டியில், எங்களது வணிகத்தில் தற்போது தோய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார், எனவே எங்களுடைய அடுத்த நிலையாக ராயல் என்ஃபீல்டு 2.0 விளங்கும், இதற்காக நாங்கள் பல்வேறு புதிய மாடல்கள் மீது கவனத்தை செலுத்தி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக நாட்டில் வாகன காப்பீடு செலவுகள் பன்மடங்கு உயர்ந்துள்ளது. பணப்புழக்கம், மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றால் பல மடங்கு இரு சக்கர வாகன விற்பனை சரிந்து காணப்படுகின்றது.

Royal-Enfield-Continental-GT-650

கடந்த நவம்பர் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் 650சிசி என்ஜின் கொண்ட கான்டினென்டினல் ஜிடி மற்றும் இண்டர்செப்டார் 650 போன்ற மாடல்களின் விற்பனை 325 எண்ணிக்கையில் தொடங்கியது. ஆனால் ஏப்ரல் மாத முடிவில் அமோகமான வளர்ச்சி பெற்று 2000 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. மேலும் இந்த இரு மாடல்களுக்கான காத்திருப்பு காலம் இந்தியாவில் அதிகபட்சமாக நான்கு மாதங்கள் வரை அதிகரித்துள்ளது.

பாரத் ஸ்டேஜ் 6 மாசு கட்டுப்பாடு விதிகளை முன்னிட்டு பல்வேறு மாறுதல்களை என்ஃபீல்ட் மேற்கொள்ள உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் புதிய கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு மாடல்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.  இதுதவிர என்ஃபீல்டு நிறுவனம் மீட்டியோர் என்ற மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. எனவே, ராயல் என்ஃபீல்டின் 2.0 இந்நிறுவனத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.