Automobile Tamil

ராயல் என்ஃபீல்டு விற்பனை 6 மாதங்களாக தொடர் சரிவு..! பின்னணி என்ன ?

ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ்

உள்நாட்டில் ராயல் என்ஃபீல்டு விற்பனை சரிய தொடங்கினாலும் ஏற்றுமதி சந்தையில் அமோகமான வளர்ச்சியை இந்நிறுவனம் பதிவு செய்து வருகின்றது. குறிப்பாக ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.

கடந்த நவம்பர் 2018 முதல் தொடங்கிய என்ஃபீல்டு நிறுவனத்தின் மாதந்திர விற்பனை சரிவை புதிய நிதியாண்டின் தொடக்க மாதத்திலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. என்ஃபீல்டு மட்டுமல்ல இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் பயணிகள் கார் உட்பட இரு சக்கர வாகன விற்பனையில் முன்னணி வகிக்கும் ஹீரோ , ஹோண்டா போன்ற நிறுவனங்களும் கடுமையான சவாலினை எதிர்கொண்டு வருகின்றது.

இரு சக்கர வாகன விற்பனை சரிவு

உலகின் நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் முன்னணி வகிக்கின்ற ராயல் என்ஃபீல்டு விற்பனை இந்தியாவில் கடும் சரிவினை சந்தித்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய வாகன காப்பீடு கட்டண உயர்வு, உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு, ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பாதுகாப்பு அம்சம் போன்ற காரணங்களால் தொடர்ந்து இரு சக்கர வாகன சந்தை கடும் சவாலினை எதிர்கொண்டு வருகின்றது.

குறிப்பாக என்ஃபீல்டு நிறுவனம் மிகப்பெரிய பாதிப்பினை கண்டுள்ளது.

மாதம் நடப்பு ஆண்டு முந்தைய ஆண்டு வித்தியாசம் (%)
நவம்பர் 2018 65,026 67,776 -4.1
டிசம்பர் 2018 56,026 65,367 -14.3
ஜனவரி 2019 70,872 76,205 -7.0
பிப்ரவரி 2019 60,066 71,354 -15.8
மார்ச் 2019 58,434 74,209 -21.3
ஏப்ரல் 2019 62,879 76,187 -17

ஆனால் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சந்தை ஏப்ரல் மாத நிலவரப்படி 140 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

மாதம் நடப்பு ஆண்டு முந்தைய ஆண்டு வித்தியாசம் (%)
நவம்பர் 2018 718 2,350 -69.44
டிசம்பர் 2018 2,252 1,601 40.66
ஜனவரி 2019 1,829 1,673 9.32
பிப்ரவரி 2019 2,564 1,723 48.81
மார்ச் 2019 2,397 1,878 27.63
ஏப்ரல் 2019 3,742 1,560 139.87
ராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் 350, 500

Exit mobile version