Automobile Tamil

வியட்நாம் சந்தையில் நுழைந்த ராயல் என்ஃபீல்டு

சென்னை பெருநகரை மையமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் தென்கிழக்காசிய நாடான வியட்நாம் சந்தையில் அதிகார்ப்பூர்வமாக நுழைந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு – வியட்நாம்

சர்வதேச அளவில் 250-750 சிசி வரையிலான நடுத்தர ரக மோட்டார் சைக்கிள் பிரிவில் மிக சிறப்பான பங்களிப்பை பெற்றுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம், பல்வேறு சந்தைகளில் தனது மோட்டார் சைக்கிள் மாடல்களை விரிவுப்படுத்தி வருகின்றது.

அந்த வரிசையில், உலகின் நான்காவது மிகப்பெரிய மோட்டார் பைக் சந்தையாக விளங்கும் வியட்நாம் நாட்டில் அமைந்துள்ள ஹோ சி மின் என்ற நகரத்தில் முதல் பிரத்தியேகமான என்ஃபீல்டு விற்பனை மற்றும் சேவைகளுக்கான மையத்தை திறந்துள்ளது. முதற்கட்டமாக வியட்நாம் சந்தையில் 500 சிசி பிரிவில் விற்பனை செய்யப்படுகின்ற புல்லட் 500, கிளாசிக் 500, கான்டினென்டினல் ஜிடி ஆகிய மூன்று மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

விரைவில் மற்ற மாடல்களான 350சிசி பைக்குகள் மற்றும் ஹிமாலயன் ஆகிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

வியட்நாம் அறிமுகத்தின் போது பேசிய ராயல் என்ஃபீல்டு தலைவர் ருத்ரேஜ் சிங் கூறியதாவது ” ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் சர்வதேச அளவில் நடுத்தர மோட்டார்சைக்கிள் பிரிவில் மிக சிறப்பான பங்களிப்பை பெற்றுள்ள நிலையில், தென்கிழக்காசிய ராயல் என்பீல்ட் நிறுவனத்துக்கு மிக முக்கிய சந்தையாக விளங்கும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version