Home Auto Industry

தென் கொரியாவில் நுழைந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்

royal-enfield-reveals-prices-abs-equipped-range

சென்னையைச் சேர்ந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் தென் கொரியா நாட்டில், சியோல் நகரில் தனது முதல் ஷோரூமை விற்பனைக்கு திறந்துள்ளது. உலகின் முதன்மையான தயாரிப்பாளராக 250-750சிசி சந்தையில் ராயல் என்ஃபீல்ட் விளங்குகின்றது.

கடந்த நிதியாண்டில் சுமார் 8,05,273 விற்பனை எண்ணிக்கை பதிவு செய்துள்ளது. மேலும் ஏற்றுமதி சந்தையில் விற்பனை எண்ணிக்கை 20,825 ஆக பதிவு செய்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு தென் கொரியா

இந்தியாவின் மிகப்பெரிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஆசியா பசுஃபிக் சந்தையின் மீது தனிக்கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. என்ஃபீல்ட் நிறுவனம், 850 டீலர்களை இந்தியாவிலும், 50 க்கு மேற்பட்ட நாடுகளில் சுமார் 540 டீலர்களை சர்வதேச அளவில் கொண்டுள்ளது.

தாய்லாந்தில் புதிய தயாரிப்பு தொழிற்சாலைக்கான திட்டத்தை என்ஃபீல்டு முன்னெடுத்து வரும் நிலையில், புதிதாக தென் கொரியாவில் முதல் விற்பனை மையத்தை Kiheung மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சியோல் தலைநகரில் தொடங்கியுள்ளது

கொரியாவில் முதற்கட்டமாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நான்கு மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 500cc புல்லட் (5,500,000 வான் / Rs 335,830), 500cc கிளாசிக் (5,950,000 வான் / Rs 363,307) மற்றும் கிளாசிக் 500 Chrome (6,200,000 வான் / Rs 378,572).  410cc ஹிமாலயன் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் (4,950,000 வான் / Rs 302,247) ஆகும்.

அறிமுகத்தின் போது பேசிய கொரியா மோட்டார்ஸ் சிஇஓ கூறுகையில் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள், கொரிய இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கிளாசிக் வடிவமைப்பில் அதி நவீன இயந்திரங்களுடன் ஒரு நீண்ட தூர பயண அனுபவம், ஓய்வுக்கான சவாரி பண்பாட்டை மேம்படுத்தும் வாய்ப்பை வழங்குவோம், இந்த பைக்குகள் நெடுஞ்சாலையில் நீண்ட சவாரிகளுக்கு ஏற்றதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version