18 % வளர்ச்சி பெற்ற ராயல் என்ஃபீல்டு ஜூன் மாத விற்பனை நிலவரம்

250-750சிசி வரையிலான சந்தையில் முதன்மையான மோட்டார்சைக்கிள் நிறுவனமாக விளங்கும் ராயல் என்ஃபீல்டு, கடந்த ஜூன் மாதந்திர விற்பனையில் முந்தைய வருடம் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 18 சதவீத வளர்ச்சியை பெற்று 74,477 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு புல்லட்

இந்தியாவின் மோட்டார் சைக்கிள் ராஜா என அழைக்கப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தொடர்ந்து 350 சிசி சந்தையில் மிக சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகின்றது. குறிப்பாக என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கிளாசிக் 350, புல்லட் போன்ற மாடல்கள் அபரிதமான சந்தையை பெற்று விளங்குவதுடன் தொடர்ந்து சிறப்பான வரவேற்பினை கொண்டுள்ளது.

கடந்த வருடம் ஜூனில் மொத்தமாக 63,160 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வருட ஜூன் மாதத்தில் 74,477 யூனிட்டுகளை விற்பனை செய்து கூடுதல் வளர்ச்சி கண்டுள்ளது. அதே போல ஏற்றுமதி சந்தையில் அபரிதமான வளர்ச்சி கண்டு வருகின்றது. உள்நாட்டில் 72,588 யூனிட்டுகளும் ஏற்றுமதி சந்தையில் 1889 யூனிட்டுகள் விற்பனை செய்துள்ளது.

இந்நிறுவனம், விரைவில் சிறப்பு எடிஷன் மாடலாக கிளாசிக் 500 பெகாசஸ் பதிப்பினை 250 யூனிட்டுகள் இந்திய சந்தையில் ஜூலை 10ந் தேதி விற்பனை செய்ய உள்ளது. அதே போல சர்வதேச அளவில் மொத்தமாக 750 யூனிட்டுகள் என மொத்தம் 1000 யூனிட்டுகளை விற்பனை செய்ய உள்ளது. இந்நிலையில் கான்டினென்டினல் ஜிடி 535 பைக்கினை சர்வதேச சந்தையிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிகின்றது.

எனவே, விரைவில் கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய இரு மாடல்களும் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

மேலும் படிக்க ; 40 % சலுகை வழங்கும் ராயல் என்ஃபீல்டு

Exit mobile version