31 % சரிவடைந்த ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் விற்பனை

நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் முன்னணி வகிக்கும் ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் நிறுவனம், தொடர்ந்து 2வது மாதமாக விற்பனையில் 31 சதவீத சரிவடைந்து மொத்தமாக 56,026 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

சமீபத்தில் வெளியான ஜாவா மோட்டார்சைக்கிள் மீதான மோகம் மற்றும் இரண்டு மாதங்கள் ராயல் என்ஃபீல்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பணியாளர்கள் வேலை நிறுத்தம் போன்ற காரணங்களால் இந்நிறுவனத்தின் விற்பனை பாதிப்படைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 7 வருடங்களில் இல்லாத அளவிற்கு என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனை டிசம்பர் 2018 மாதந்திர விற்பனையில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த டிசம்பர் 2017யில் 65,367 யூனிட்டுகள் விற்பனை செய்திருந்த நிலையில் டிசம்பர் 2018யில் 31 சதவீதம் சரிவைடந்து 56,026 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ராயல் என்ஃபீலட்  நிறுவனத்தின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இந்நிறுவனம் சுமார் 30,000 யூனிட்டுகள் வரை உற்பத்தியை இழந்துள்ளதாக குறிபிடப்பட்டுள்ளது. மேலும் , தற்போது உற்பத்தியில் பாதிப்பில்லை என என்ஃபீல்டு நிறுவன அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version