Home Auto Industry

ராயல் என்ஃபீல்ட் பைக் விற்பனை 22 சதவீதம் வளர்ச்சி – செப்டம்பர் 2017

இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளிலும் ராயல் என்ஃபீல்ட் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் செப்டம்பர் 2017 மாதந்திர விற்பனை முடிவில் 22 சதவீத வளர்ச்சியை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பெற்றுள்ளது.

பைக் விற்பனை நிலவரம் – செப்டம்பர் 2017

கடந்த செப்டம்பர் மாத முடிவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் 70,431 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. முந்தைய வருடத்தின் இதே மாதத்துடன் (57,842 விற்பனை) ஒப்பீடுகையில் 22 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 56,958 பைக்குகளும், இந்த வருடத்தின் செப்டம்பர் மாத முடிவில் 69,393 பைக்குகளும் விற்பனை ஆகியுள்ளது. மேலும் ஏற்றுமதி சந்தையில் கடந்த வருடசெப்டம்பரில் 884 அலகுகளாக இருந்த விற்பனை தற்போது 1,038 அலகுகளாக உயர்வு பெற்றுள்ளது.

விற்பனை Sep-17 Sep-16 வளர்ச்சி
உள்நாடு 69,393 56,958 22%
ஏற்றுமதி 1,038 884 17%
மொத்தம் 70,431 57,842 22%

 

சமீபத்தில் இந்நிறுவனம் பின்புறத்தில் டிஸ்க் பிரேக் வசதியுடன் கூடிய கன்மெட்டல் கிரே கிளாசிக் 350 மற்றும் செல்த் பிளாக் கிளாசிக் 500 ஆகிய இரு மாடல்கள் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

Exit mobile version