21 சதவீதம் சரிந்த ராயல் என்ஃபீல்டு பைக் விற்பனை நிலவரம்

ராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் 350, 500 சிறப்புகள்

இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் தயாரிப்பளாரான ராயல் என்ஃபீல்டு நிறுவன விற்பனை  21 சதவீதம் சரிவை மாரச் 2019 மாதந்திர விற்பனையில் பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் இந்நிறுவனம் விற்பனை எண்ணிக்கை  58,434 மட்டும் ஆகும்.

கடந்த 2018-2019 ஆம் நிதியாண்டில் என்ஃபீல்டு நிறுவனம், உள்நாட்டில் 1 சதவீத வளரச்சியை பதிவு செய்து 805,273 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 801,230 யூனிட்டுகள் விற்றிருந்தது.

ராயல் என்ஃபீல்டு விற்பனையில் வீழ்ச்சி

கடந்த மார்ச் 2019-ல் மொத்தமாக உள்நாட்டு விற்பனை 21 சதவீதம் சரிவடைந்துள்ளது. மார்ச்சில் 58,434 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 74,209 பைக்குகளை விற்றிருப்பது குறிப்பிடதக்கதாகும்.

ஆனால் ஏற்றுமதி சந்தையில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விற்பனை 28 சதவீதம் அதிகித்துள்ளது. மாரச் 2019-ல் 2,397 யூனிட்டுகளும், முந்தைய வருடத்தின் இதே மாதத்தில் 1,878 யூனிட்டுகள் மட்டும் விற்றிருந்தது.

சமீபத்தில் இந்நிறுவனம், ஆஃப்ரோடு மற்றும் ஆன்ரோடு அனுபவத்தை வழங்கவல்ல ராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் 350 மற்றும் 500 பைக்குகளை வெளியிட்டுள்ளது. மேலும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக வினோத் தசராய் பொறுப்பேற்றுள்ளார்.

Exit mobile version