Automobile Tamil

இந்தியாவில் டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக் அறிமுக விபரம்

டாடா ஹாரியர் எஸ்யூவி

டாடா மோட்டார்சின் மிகவும் ஸ்டைலிஷான எஸ்யூவி மாடலாக விளங்கும் ஹாரியர் எஸ்யூவியில் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட டாடா ஹாரியரின் விலை ரூபாய் ரூ.12.25 லட்சம் முதல் விலை ரூ.12.69 லட்சம் என விற்பனையக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஆட்டோமேட்டிக் மற்றும் பெட்ரோல்

5 இருக்கை பெற்ற ஹேரியர் 2.0 லிட்டர் Kryotec டீசல் என்ஜின் கொண்டு அதிகபட்சமாக 140 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வழங்குவதுடன், இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

7 இருக்கை பெற்ற கான்செப்ட் சமீபத்தில் ஜெனீவா மோட்டார் ஷோவில் பஸ்ஸார்டு என பெயரிடப்பட்டு காட்சிக்கு வந்த நிலையில், ஆட்டோமேட்டிக் மற்றும் பெட்ரோல் என்ஜின் கொண்ட 5 இருக்கை பெற்ற மாடல் மீதான ஈர்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டாடா நிறுவனம், ஆட்டோமேட்டிக் மற்றும் பெட்ரோல் என்ஜின் பெற்ற வேரியண்டுகளை 2020 ஆம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட டார்க் கன்வெர்ட்டர் கொண்டதாக இருக்கலாம்.

அடுத்து, இந்த காரில் டார்க் கன்வெர்டருக்கு மாற்றாக டூயல் கிளட்ச் அமைப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் பெட்ரோல் மற்றும் டீசல் ஹேரியர் மாடல்களில் வழங்கப்படலாம். பெட்ரோல் ஹாரியர் காரில் 140 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் என்ஜின் பொருத்தப்படலாம்.

மேலும் வாசிங்க ;- டாடா ஹாரியர் விலை ரூ.25,000 வரை உயருகின்றது.

Exit mobile version