58 % வீழ்ச்சி அடைந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 2019 விற்பனை

0

Tata Tiago JTP & Tigor JTP

இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் வான தயாரிப்பாளரான டாடா நிறுவனத்தின் பயணிகள் வாகன ஆகஸ்ட் 2019 மாதந்திர விற்பனை வீழ்ச்சி 58 சதவீதமாக பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் மொத்தமாக 7316 பயணிகள் வாகனங்ளை மட்டும் விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2018-ல் மொதமாக பயணிகள் வாகன விற்பனை 17,351 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது. ஆனால், மொத்தமாக 7316 பயணிகள் வாகனங்ளை மட்டும் ஆகஸ்ட் 2019-ல் விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 58 சதவீத வீழ்ச்சியாகும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதர மந்தநிலை காரணமாக ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் மிகப்பெரிய வீழ்ச்சி கண்டு வருகின்றன.

நடப்பு 2019 ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மாதந்திர விற்பனை குறைவான மாதமாக ஆகஸ்ட் 2019 உள்ளது. சமீப்பதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய ஹாரியர் டார்க் எடிஷன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.