2019 ஜூலை மாத விற்பனையான கார்களில் டாப் 10 மாடல்கள்

Hyundai venue SUV

இந்திய ஆட்டோமொபைல் சந்தை தொடர் சரிவினை சந்தித்து வரும் நிலையில் டாப் 10 கார்கள் பற்றி ஜூலை 2019 மாதந்திர விற்பனையை பட்டியலை அறிந்து கொள்ளலாம். முதலிடத்தை இம்முறை மாருதி சுஸூகி வேகன் ஆர் கைப்பற்றியுள்ளது.

மாருதி சுஸூகி ஆட்டோ இந்திய நிறுவனத்தின் 7 கார்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும், யூட்டிலிட்டி சந்தையில் முன்னணி வகித்து வந்த விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 14,181 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஜூலை 2019ல் 63 சதவீத வீழ்ச்சி அடைந்து 5,302 யூனிட்டுள் விற்பனை ஆகி 13 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளத.

ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவின் எஸ்யூவி ரக சந்தையை கைப்பற்றி முதலிடத்தை பெற்றுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வென்யூ மொத்தமாக ஜூலை மாதத்தில் 9,585 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சராசரியாக மாதம் 20,000 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் மாருதி ஆல்ட்டோ விற்பனை 50 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் மாருதி எர்டிகா கார் விற்பனை முந்தை ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 94 சதவீதம் வளர்ச்சி பெற்று 9,222 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. மேலும் ஆம்னி வேன் நீக்கப்பட்டதை தொடர்ந்து மாருதி ஈக்கோ சிறப்பான வளர்ச்சி கண்டு வருகின்றது.

வ.எண் தயாரிப்பாளர்/மாடல் ஜூலை 2019
1. மாருதி சுசூகி வேகன்ஆர் 15,062
2. மாருதி சுசூகி டிசையர் 12,923
3. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 12,677
4. மாருதி சுசூகி ஆல்டோ 11,577
5. மாருதி சுசூகி பலேனோ 10,482
6. மாருதி சுசுகி ஈக்கோ 9,814
7. ஹூண்டாய் வென்யூ 9,585
8 மாருதி சுசூகி  எர்டிகா 9,222
9. ஹூண்டாய் எலைட் ஐ20 9,012
10. ஹூண்டாய் கிரெட்டா 6,585

*Source: AutoPunditz