டிசம்பர் 2019-ல் டாப் 10 கார்கள்.. முதலிடத்தில் மாருதியின் பலேனோ

0

maruti s-presso

2019 ஆம் ஆண்டின் இறதி மாதத்தில் விற்பனையில் டாப் 10 கார்களை பற்றி அறிந்து கொள்ளலாம். குறிப்பாக கடந்த சில மாதங்களாக பட்டியலில் இடம்பிடித்த கியா செல்டோஸ் இந்த முறை இடம்பிடிக்கவில்லை.

Google News

2019 ஆம் ஆண்டு விற்பனையில் டாப் கார்கள் பட்டியலை தொடர்ந்து தற்போது டிசம்பர் மாத விற்பனையில் பலேனோ கார் முதலிடத்தை கொண்டுள்ளது. வேன் பிரிவில் மாருதி ஈக்கோ தொடர்ந்து நல்ல வரவேற்பினையும், எஸ்யூவி கார்களை பொறுத்த வரை மாருதி பிரெஸ்ஸா மற்றும் வெனியூ முன்னணி வகிக்கின்றது.

டாப் 10 கார்களில் 8 இடங்களை மாருதி சுசுகி நிறுவனமும், ஹூண்டாய் இரு இடங்களையும், அடுத்து, மாருதியின் புதிய மாடலான எஸ்-பிரெஸ்ஸோ பட்டியலில் 8,394 யூனிட்டுகள் விற்பனை செய்து டாப் 10 கார் பட்டியிலில் 8வது இடத்தில் உள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் –  டிசம்பர் 2019

வ.எண் தயாரிப்பாளர்/மாடல் டிசம்பர் 2019
1. மாருதி சுசூகி பலேனோ 18,464
2. மாருதி சுசூகி ஆல்ட்டோ 15,489
3. மாருதி சுசூகி டிசையர் 15,286
4. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 14,749
5. மாருதி சுசூகி பிரெஸ்ஸா 13,658
6. மாருதி சுசூகி வேகன் ஆர் 10,781
7. ஹூண்டாய் வென்யூ 9,521
8 மாருதி சுசூகி  எஸ்-பிரெஸ்ஸோ 8,394
9. ஹூண்டாய் எலைட் ஐ20 7,740
10. மாருதி ஈக்கோ 7,634