ஆக்டிவா முதல் கிளாசிக் 350 வரை டாப் 10 பைக்குகள் – ஜனவரி 2018

இந்தியளவில் கடந்த ஜனவரி 2018 மாதந்திர இரு சக்கர வாகன விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை டாப் 10 பைக்குகள் – ஜனவரி 2018 பதிவில் தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

டாப் 10 பைக்குகள் – ஜனவரி 2018

உலகயளவில் 250-500சிசி வரையிலான சந்தையில் இடம்பெற்றுள்ள மாடல்களில் மிக அதிகப்படியான விற்பனையை பதிவு செய்யும் மாடலாக விளங்குகின்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் இந்த வரிசையில் 53,221 யூனிட்களுடன் 10வது இடத்தில் உள்ளது.

ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதல் 10 இடங்களில் முதலிடத்தில் 2,48,826 அலகுகளை விற்பனை செய்து ஆக்டிவா உள்ளது.மற்றொரு ஸ்கூட்டர் மாடலான டிவிஎஸ் ஜூபிடர் 64,990 அலகுகளை விற்பனை செய்துள்ளது.

125சிசி சந்தையில் தொடர்ந்து ஹீரோ கிளாமர் மற்றும் ஹோண்டா சிபி ஷைன் ஆகிய இரு மாடல்களும் சந்தையில் தொடர்ந்து சிறப்பான வரவேற்பினை பெற்று வருகின்றது.

தொடக்கநிலை ஸ்போர்ட்டிவ் சந்தையில் சிறப்பான பங்களிப்பினை பெற்று விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசை பைக்குகள் 9வது இடத்தில் உள்ளது.

டாப் 10 பைக்குகள் – ஜனவரி 2018

வ.எண் மாடல் ஜனவரி -18
1 ஹோண்டா ஆக்டிவா 2,43,826
2 ஹீரோ ஸ்பிளென்டர் 2,31,356
3 ஹீரோ HF டீலக்ஸ் 1,71,167
4 ஹோண்டா CB ஷைன் 82,390
5 டிவிஎஸ் XL சூப்பர் 76,309
6 ஹீரோ கிளாமர் 75,533
7 டிவிஎஸ் ஜூபிடர் 64,990
8 ஹீரோ பேஸன் 61,661
9 பஜாஜ் பல்சர் வரிசை 56,919
10 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 53,221

 

மறக்காம படிங்க – விற்பனையில் டாப் 10 கார்கள் ஜனவரி 2018

Exit mobile version