டிசையர் முதல் பொலிரோ வரை விற்பனையில் டாப் 10 கார்கள் – பிப்ரவரி 2018

டிசையர் முதல் பொலிரோ வரை விற்பனையில் டாப் 10 கார்கள் - பிப்ரவரி 2018 1இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையின் வளர்ச்சி சீராக தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், கடந்த பிப்ரவரி 2018 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை அதாவது விற்பனையில் டாப் 10 கார்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

விற்பனையில் டாப் 10 கார்கள் – பிப்ரவரி 2018

டிசையர் முதல் பொலிரோ வரை விற்பனையில் டாப் 10 கார்கள் - பிப்ரவரி 2018 2

சமீபத்தில் இந்தியாவின் முன்னணி மாடலாக விளங்குகின்ற மாருதி ஆல்டோ 35 லட்சம் விற்பனை இலக்கினை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், முதல் 10 இடங்களில் மாருதி ஆல்டோ கார் 19,760 அலகுகள் விற்பனை ஆகி இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் முன்னணி செடான் மற்றும் பிரபலமான டிசையர் கார் டாப் 10 கார்களின் பட்டியிலில் 20,941 யூனிட்கள் விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. மொத்தம் 10 இடங்களில் 6 இடங்களை மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட், வேகன்ஆர், பலேனோ பிரெஸ்ஸா ஆகிய கார்களும் இடம்பிடித்து முதல் 5 இடங்களை மாருதி பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து ஹூண்டாய் இந்தியா பிரிவு நிறுவனத்தின் கிராண்ட் ஐ10, எலைட் ஐ20, மற்றும் க்ரெட்டா எஸ்யூவி ஆகியவற்றுன் இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற யுட்டிலிட்டி வாகனமாக விளங்கி வரும் மஹிந்திரா பொலிரோ 10வது இடத்தில் உள்ளது.

டிசையர் முதல் பொலிரோ வரை விற்பனையில் டாப் 10 கார்கள் - பிப்ரவரி 2018 3

தொடர்ந்து முழுமையான 2018 பிப்ரவரி மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.

விற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – பிப்ரவரி 2018
வ. எண் தயாரிப்பாளர் பிப்ரவரி – 2018
1. மாருதி சுசூகி டிசையர் 20,941
2. மாருதி சுசூகி ஆல்டோ 19,760
3. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 17,291
4.  மாருதி சுசூகி பலேனோ 15,807
5. மாருதி சுசூகி வேகன்ஆர் 14,029
6. ஹூண்டாய் எலைட் ஐ20 13,378
7. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 11,620
8. ஹூண்டாய் கிராண்ட் ஐ10   10,198
9. ஹூண்டாய் க்ரெட்டா   9,278
10. மஹிந்திரா பொலிரோ (Automobile Tamilan)   8,001

டிசையர் முதல் பொலிரோ வரை விற்பனையில் டாப் 10 கார்கள் - பிப்ரவரி 2018 4

Recommended For You

About the Author: Rayadurai