விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018

0

இந்திய பயணிகள் வாகன சந்தையில் மாருதி சுசூகி நிறுவனம் முதன்மையான இடத்தை பெற்று விளங்கும் நிலையில், மாதந்திர விற்பனையில் டாப் 10 கார்கள் ஜூன் 2018 விபர பட்டியலை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

பயணிகள் வாகன சந்தையில் எஸ்.யூ.வி ரக மாடல் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களான பிரெஸ்ஸா, நெக்ஸான் , ஈக்கோஸ்போர்ட், டியூவி 300, க்ரெட்டா உள்ளிட்ட மாடல்கள் அமோகமான விற்பனையை அடைந்து வருகின்றது.

Google News

தொடக்க நிலை சந்தையில் மாருதி ஆல்ட்டோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட் போன்ற மாடல்கள் சந்தையில் முன்னிலையில் உள்ளது. டிசையர் கார் முதலிடத்தில் 24,465 யூனிட்டுகளும், இரண்டாவது இடத்தில் 18,171 யூனிட்டுகளுடன் மாருதி ஸ்விஃப்ட் உள்ளது.

எஸ்யூவி ரக மாடல்களான விட்டாரா பிரெஸ்ஸா-வை பின்னுக்கு தள்ளி ஹூண்டாய் க்ரெட்டா பட்டியிலில் 7 வது இடத்தை பெற்று 11,111 யூனிட்டுகள் விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் மற்றும் மாருதி நிறுவனத்தை தவிர 10வது இடத்தில் பிரசத்தி பெற்ற ஹோண்டா அமேஸ் கார்கள் 9103 யூனிட்டுகள் விற்பனை செய்துள்ளது.

தொடர்ந்து முழுமையான 2018 ஜூன் மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.

விற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – ஜூன் 2018

வ. எண் தயாரிப்பாளர் ஜூன் 2018 மே -2018
1. மாருதி சுசூகி டிசையர் 24,465 24,365
2. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 18,171 19,208
3. மாருதி சுசூகி ஆல்டோ 18,070 21,890
4. மாருதி சுசூகி பலேனோ 17,850 19,398
5. மாருதி சுசூகி வேகன்ஆர் 11,311 15,974
6. ஹூண்டாய் எலைட் ஐ20 11,262 10,664
7. ஹூண்டாய் க்ரெட்டா 11,111 11,004
8. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 10,713 15,629
9. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 10,343 10,939
10. ஹோண்டா அமேஸ் (Automobile Tamilan)  9,103 9,789