மீண்டும் முதலிடத்தை கைப்பற்றிய மாருதி ஆல்டோ விற்பனையில் டாப் 10 கார்கள் நவம்பர் 2017

0

maruti alto k10 plusமாருதி சுசுகி நிறுவனம் தொடர்ந்த கார் விற்பனையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்ற நிலையில் டிசையர் காரை பின்னுக்கு தள்ளி ஆல்டோ மீண்டும் முதலிடத்தை நவம்பர் மாதம் கைப்பற்றியுள்ளது.

டாப் 10 கார்கள் – நவம்பர் 2017

maruti vitara brezza suv fr

Google News

கடந்த நவம்பர் மாத விற்பனை முடிவில் முன்னணி 10 இடங்களை பிடித்த கார்களை பற்றி தொடர்ந்து காணலாம்.

கடந்த சில மாதங்களாக புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் முதலிடத்தை பெற்று வந்த நிலையில் மீண்டும் தனது முதலிடத்தை நவம்பர் மாதம் 24,166 கார்களை விற்பனை செய்துள்ளது.

இதே காலகட்டத்தில் மாருதி சுசுகி டிசையர் 20,610 கார்களை விற்பனை செய்துள்ளது. மேலும் கடந்த மாதம் பட்டியலில் 10வது இடத்தை பிடித்திருந்த பிரசத்தி பெற்ற டாடா டியாகோ நவம்பர் மாத முடிவில் 7416 கார்களை விற்பனை செய்து 11வது இடத்தை பெற்றுள்ளது. மேலும் மற்றொரு பிரபலமான ஹேட்ச்பேக் கார் மாடலான ரெனோ க்விட் பட்டியிலில் இடம்பெறவில்லை.

2017 Maruti DZire Side Profile

தொடர்ந்து முழுமையான நவம்பர் மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.

விற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – நவம்பர் 2017
வ. எண் தயாரிப்பாளர் நவம்பர் – 2017
1. மாருதி சுசூகி ஆல்டோ 24,166
2. மாருதி சுசூகி டிசையர் 22,492
3. மாருதி சுசூகி பலேனோ 17,769
4. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 14,458
5.  மாருதி சுசூகி வேகன்ஆர் 14,038
6. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 13,337
7. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 13,249
8. ஹூண்டாய் எலைட் ஐ20  10,236
9. ஹூண்டாய் க்ரெட்டா  8,528
10. மாருதி செலிரியோ (Automobile Tamilan)  8,437

 

2017 hyundai i20 elite

2017 hyundai creta