விற்பனையில் கலக்கும் டாப் 10 டூ-வீலர் விபரம் – நவம்பர் 2018

இந்திய டூ வீலர் சந்தையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்ற நிலையில் ஹீரோ ஸ்பிளென்டர், ஹீரோ HF டீலக்ஸ், ஹீரோ பேஸன் போன்றவை விற்பனையில் அபரிதமான இடத்தை பெற்று விளங்குகின்றது.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஒட்டுமொத்த இந்திய இரு சக்கர வாகன சந்தையில் சுமார் 36.5 சதவீத பங்களிப்பை பெற்று முதன்மையான நிறுவனமாக விளங்கி வரும் நிலையில், இதனை தொடர்ந்து ஹோண்டா நிறுவனம் மிக சிறப்பான ஸ்கூட்டர் சந்தையை கைப்பற்றி சுமார் 24 சதவீத பங்களிப்பை கொண்டு விளங்குகின்றது.

ஸ்கூட்டர் சந்தையில் தனது பங்களிப்பை ஹீரோ அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ டெஸ்ட்னி 125 நல்ல வரவேற்பை பெற்று நவம்பரில் 16,047 என்ற எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

விற்பனையில் டாப் 10 டூ-வீலர்கள் – நவம்பர் 2018

வ.எண் மாடல் நவம்பர் 2018
1 ஹீரோ ஸ்பிளென்டர் 2,25,536
2 ஹோண்டா ஆக்டிவா 2,18,212
3 ஹீரோ HF டீலக்ஸ் 1,68,839
4 டிவிஎஸ் XL சூப்பர் 74,590
5 ஹீரோ பேஸன் 74,396
6 ஹோண்டா CB ஷைன் 70,803
7 பஜாஜ் பல்சர் வரிசை 69,579
8 டிவிஎஸ் ஜூபிடர் 69,391
9 ஹீரோ கிளாமர் 63,416
10 பஜாஜ் பிளாட்டினா 62,555