Automobile Tamilan

விற்பனையில் தொடரும் ஹோண்டா ஆக்டிவா ஆதிக்கம் – அக்டோபர் 2017

இந்திய இருசக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஆகிய ஸ்கூட்டர்கள் அமோக வளர்ச்சி அடைந்துள்ளது.

இருசக்கர வாகன விற்பனை – அக்டோபர் 2017

மோட்டார்சைக்கிள் பிரிவை விட ஸ்கூட்டர் சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகின்ற நிலையில் ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிடர் என இரு ஸ்கூட்டர் மாடல்களும் அமோகமான சந்தை மதிப்பை பெற்றதாக விளங்குகின்றது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒட்டுமொத்த ஸ்கூட்டர் விற்பனை 11 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது ஸகூட்டர் சந்தை 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 259,071 அலகுகள் விற்பனை ஆகி முதன்மையான இரு சக்கர வாகனமாக அக்டோபர் 2017-யில் விளங்குகின்றது. அதனை தொடர்ந்து ஹீரோ ஸ்பிளென்டர் 215,631  அலகுகள் விற்பனை ஆகியுள்ளது.

இருச்சகர வாகன பிரிவில் முதல் 10 இடங்களில் 5வது இடத்தை டிவிஎஸ் ஜூபிடர் கைப்பற்றியுள்ளது. ஸ்கூட்டர் சந்தையில் இரண்டாவது இடத்தில் ஜூபிடர் உள்ளது.

125சிசி சந்தையில் ஹீரோ கிளாமர் பைக் முதலிடத்திலும் அதனை தொடர்ந்து மிக குறைவான எண்ணிக்கை வித்தியாசத்தில் ஹோண்டா ஷைன் உள்ளது.

டாப் 10 பைக்குகள் – அக்டோபர் 2017

வ.எண் மாடல் அக்டோபர் -17
1 ஹோண்டா ஆக்டிவா 259071
2 ஹீரோ ஸ்பிளென்டர் 215631
3 ஹீரோ HF டீலக்ஸ் 151656
4 ஹீரோ பேஸன் 88997
5 டிவிஎஸ் ஜூபிடர் 81326
6 ஹீரோ கிளாமர் 76830
7 டிவிஎஸ் XL சூப்பர் 75037
8 ஹோண்டா CB ஷைன் 71133
9 பஜாஜ் பல்சர் 64233
10 பஜாஜ் சிடி 100 59827

 

மொபட் சந்தையில் டிவிஎஸ் எக்எல் சூப்பர் மாடல் 75,037 அலகுகள் விற்பனை ஆகியுள்ளதை தொடர்ந்து பல்சர் மற்றும் சிடி 100 ஆகிய இரு மாடல்களும் 9 மற்றும் 10வது இடத்தை பெற்றுள்ளது.

Exit mobile version