Automobile Tamilan

அக்டோபர் 2019., விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்

Bajaj Ct 110 Blue

இந்திய சந்தையின் இரு சக்கர வாகன பிரிவில் தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் முதன்மையான இடத்தில் தொடர்ந்து விளங்குகின்றது. கடந்த அக்டோபரில் பயணிகள் வாகனம் மட்டும்ல்ல இரு சக்கர வாகன விற்பனையும் தொடர்ந்து சரிவினை சந்தித்து வருகின்றது.

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஆக்செஸ் ஸ்கூட்டரின் விற்பனை தொடர்ந்து சீரான வேகத்தில் அதிகரித்து வருகின்றது. மற்ற இரு சக்கர வாகனங்கள் சரிவில் உள்ள நிலையில் சுசுகி மட்டும் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்து வருகின்றது. கடந்த அக்டோபரில் 53,552 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

125சிசி சந்தையில் இடம்பெறுகின்ற ஹீரோ கிளாமர் பட்டியலில் இல்லாத நிலையில் பஜாஜ் ஆட்டோவின் பிளாட்டினா, சிடி போன்ற மாடல்கள் இடம்பிடித்துள்ளளன. ஸ்கூட்டர் மாடல்களை பொறுத்தவரை ஆக்டிவா, ஜூபிடர் மற்றும் சுசுகி ஆக்செஸ் இடம்பெற்றுள்ளது.

விற்பனையில் டாப் 10 டூ வீலர்கள் – அக்டோபர் 2019

வ.எண் தயாரிப்பாளர் அக்டோபர் 2019
1. ஹோண்டா ஆக்டிவா 281,273
2. ஹீரோ ஸ்ப்ளெண்டர் 264,137
3. ஹீரோ HF டீலக்ஸ் 185,751
4. பஜாஜ் பல்ஸர் 95,509
5. ஹோண்டா சிபி ஷைன் 87,743
6. டிவிஎஸ் ஜூபிடர் 74,560
7. பஜாஜ் பிளாட்டினா 70,466
8. பஜாஜ் சிடி 61,483
9. டிவிஎஸ் XL சூப்பர் 60,174
10. சுசூகி ஆக்செஸ் 53,552

Exit mobile version