டொயோட்டா கார்கள் & எஸ்யூவி விலை உயர்ந்தது – ஜிஎஸ்டி

நடுத்தர கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள செஸ் வரி மத்திய அரசு உயர்த்தியுள்ளதை தொடர்ந்து டொயோட்டா கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல் ரூ.1.60 லட்சம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டொயோட்டா கார் விலை உயர்வு – ஜிஎஸ்டி

இந்நிறுவனம் நடுத்தர ரக கார்கள் மற்றும் பிரிமியம் எஸ்யூவி மாடல்களை விற்பனை செய்து வருகின்ற நிலையில் 2-7 சதவீதம் வரை செஸ் வரி உயர்த்தப்பட்டுள்ள காரணத்தால் டொயோட்டா அதிகார்வப்பூர்வ விலை உயர்வினை செப்டம்பர் 12,2017 முதல் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

விலை உயர்வு விபரம் டெல்லி அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

இன்னோவா க்ரிஸ்டா ரூ.78,000

ஃபார்ச்சூனர் – ரூ.1.60 லட்சம்

கரோல்லா அல்டிஸ் – ரூ. 72,000

எட்டியோஸ் -ரூ.13,000

முந்தைய ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி வரி விதிப்பின் அடிப்படையில் ரூ.2 லட்சம் வரை ஃபார்ச்சூனர் வரை குறைந்திருந்தது.

Recommended For You