ஸ்கூட்டர் விற்பனையில் ஹீரோவை வீழ்த்திய டிவிஎஸ் அதிரடி

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனத்தை ஸ்கூட்டர் விற்பனையில் பின்னுக்கு தள்ளி டிவிஎஸ் மோட்டார்ஸ் இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.

ஸ்கூட்டர் விற்பனை 2016-2017

  • ஸ்கூட்டர் விற்பனையில் ஹீரோ நிறுவனத்தை டிவிஎஸ் பின்னுக்கு தள்ளியுள்ளது.
  • ஹீரோ நிறுவனம் ஸ்கூட்டர் விற்பனையில் 1.64 சதவீத வீழ்ச்சியை பெற்றுள்ளது.
  • யமஹா நிறுவனம் மற்ற நிறுவனங்களை காட்டிலும் 37 சதவீத கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளது.

ஹோண்டா நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் வலுவான பங்களிப்பினை பெற்று விளங்குகின்ற நிலையில் போட்டியாளர்களான டிவிஎஸ் ,ஹீரோ,யமஹா போன்ற நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்தே வருகின்றது.

சியாம் வெளியிட்டுள்ள ஸ்கூட்டர் விற்பனை நிலவர அறிக்கையின் படி கடந்த ஏப்ரல் 2016 முதல் பிப்ரவரி 2017 வரையிலான காலகட்டத்தின் விற்பனை அட்டவனை கீழே இணைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டரின் துனையினால் முதலிடத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளது. அதனை தொடர்ந்து டிவிஎஸ் மோட்டார்ஸ் உள்ளது. மற்ற நிறுவனங்களை காட்டிலும் யமஹா நிறுவனம் 37.34 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Recommended For You