டிவிஎஸ் மோட்டார் விற்பனை நிலவரம் மே 2018

தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, நிறைவடைந்த மே மாத விற்பனை முடிவில் 309,865 இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்து முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 10 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. சமீபத்தில் டிவிஎஸ் என்டார்க் 125, புதிய அப்பாச்சி வரிசை ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது.

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி

டிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டர் மற்றும் பைக் என இரண்டிலும் மிக சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் அப்பாச்சி வரிசை மற்றும் டிவிஎஸ் ஜூபிடர், வீகோ, ஸ்கூட்டி பெப், என்டார்க் 125 ஆகியவை அமோக ஆதரவை பெற்று வருகின்றது.

இருசக்கர வாகன பிரிவில் டிவிஎஸ் இந்தியா மற்றும் ஏற்றுமதி சந்தை உட்பட மொத்தம் 298,135 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டு மே மாதத்துடன் ஒப்பீடுகையில் 8.2 சதவீத வளர்ச்சி (விற்பனை எண்ணிக்கை 275,426 ) ஆகும். இந்தியாவில் விற்பனை 2.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது மே 2018யில்  246,231 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சந்தை 52.3 சதவீதம் வளர்ந்துள்ளது.

மூன்று சக்கர வாகன விற்பனை 78.2 சதவீத வளர்ச்சி அடைந்து 11,730 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் வெறும் 6581 வாகனங்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

Recommended For You