2019-ம் நிதியாண்டில் 37 லட்சம் டூவீலர் விற்பனை செய்த டிவிஎஸ் மோட்டார்

0

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி

கடந்த நிதியாண்டை விட FY2018-2019 ஆம் நிதியாண்டில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, 12 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. டிவிஎஸ் பைக் நிறுவனம் மொத்தமாக 37.57 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

முந்தைய 2018 ஆம் நிதியாண்டில்  33.67 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்தது. மேலும் மார்ச் 2019-ல் மொத்த விற்பனை 1.54 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

டிவிஎஸ் மோட்டார் விற்பனை நிலவரம் FY2018-2019

மார்ச் 2019 மாதந்திர விற்பனை முடிவில் டிவிஎஸ் டூவீலர் நிறுவனம், எண்ணிக்கை 3,10,901 விற்பனை செய்திருந்தது. இதே காலகட்டத்தில் முந்தைய வருடம் 3,15,773 யூனிட்டுகளை விற்றிருந்தது. இது இந்நிறுவனத்தின் 1.54 சதவீத விற்பனை சரிவாகும்.

கடந்த 2018-2019 ஆம் நிதி ஆண்டில் டிவிஎஸ் நிறுவனம் மொத்தமாக 37.57 லட்சம்  டூவர்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 33.67 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது இந்நிறுவனத்தின் 12 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன விற்பனை முந்தைய நிதியாண்டை விட 59 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2017-18 நிதி வருடத்தில் 99 ஆயிரம் என இருந்த எண்ணிக்கை, 2018-19 வருடத்தில் 1.56 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.