மின்சார வாகனங்களுக்கு அந்தஸ்த்தை வழங்கும் மத்திய அரசு

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு சிறப்பு சலுகைககளுடன் ஜிஎஸ்டி வரி குறைப்பு, வரிச் சலுகை போன்றவற்றை வழங்கியுள்ளது. ஆனால் IC என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எந்தவொரு சலுகைகளையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. மாறாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ரூ.2 உயர்த்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டு முதல் 150சிசி க்கு குறைவான பெட்ரோல் என்ஜின் பெற்ற இரு சக்கர வாகனங்களை தயாரிப்பு நிறுத்தம் உட்பட பல்வேறு சிறப்பு முறைகளை நிதி அயோக் பரிந்துரைத்துள்ள நிலையில், மின்சார வாகன விற்பனை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக வாங்குவோர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களுக்கு சலுகைகள் , மின்சார வாகனங்களுக்கான சில உதிரிபாகங்கள் இறக்குமதி வரியை குறைத்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறகின்றது.

மத்திய பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய அறிவிப்புகள்

மத்திய நிதி அமைச்சர் மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து முதல் 5 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி கவுன்சிலிடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்சார வாகனங்களை வாங்குவதற்கான வங்கிக் கடனில் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் அளவிற்கு வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது. எனவே, மொத்தமாக 2.5 லட்சம் வரை சலுகை பெற வாய்ப்பாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு என தேவைப்படுகின்ற சில உதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு என இந்தியாவில் FAME-II ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட உள்ளது.

ஆட்டோமொபைல் சார்ந்த மற்ற அறிவிப்புகள்

பெட்ரோல் மற்றும் டீசல் மீது கலால் வரியாக ரூ 1 அதிகரிப்பு மற்றும் ரூ.1 கூடுதல் சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் வரியாக வசூலிக்கப்பட உள்ளது. ஆக மொத்தமாக ரூ.2 வரை பெட்ரோல்,டீசல் விலை அதிகரிக்கும்.

முழுமையாக வடிவமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் சிலவற்றுக்கு வரி ( CBU) சுங்க வரி 25 சதவீதத்திலிருந்து  30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டில் உற்பத்தி மேலும் அதிகரிக்கும்.

அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ .80,250 கோடி முதலீட்டில் 125,000 கி.மீ கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளது. இதனால் கிராமப்புற பொருளாதாரத்தை அதிகரிக்க உதவும்.

ரூ .400 கோடி வரை விற்றுமுதல் லாபம் பெறும் நிறுவனங்களுக்கு குறைந்த கார்ப்பரேட் வரியாக 25% விதிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக 80% க்கும் மேற்பட்ட வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் விற்பனையாளர்களுக்கு நன்மைகளை கிடைக்கும்.

ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி

மத்திய பட்ஜெட்டில் இரு சக்கர வாகனங்களுக்கு வரி குறைப்பு தொடர்பாக எதிர்பார்த்த நிறுவனங்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளது. கடந்த நவம்பர் 2018 முதல் இந்திய ஆட்டோமொபைல் சந்தை தொடர் சரிவை சந்தித்து வருகின்றது.

Exit mobile version