10 லட்சம் கார்களை உற்பத்தி செய்த வோக்ஸ்வேகன் இந்தியா

வோக்ஸ்வேகன் இந்தியா

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், தனது புனே உற்பத்தி பிரிவில் முதல்முறையாக 10 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் வோக்ஸ்வேகன் செயல்பட்டு வருகின்றது.

புனே ஆலையில் மேட் ஃபார் இந்தியா கார் என அழைக்கப்படுகின்ற வோக்ஸ்வேகன் ஏமியோ 1 மில்லியன் காராக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த சாதனையை படைத்துள்ளது.

வோக்ஸ்வேகன் இந்தியா சாதனை

கடந்த மார்ச் 2009-ல் உற்பத்தியை தொடங்கிய இந்நிறுவனம் முதல் காரினை தனது துனை பிராண்டான ஸ்கோடாவின் ஃபேபியா மாடலை உற்பத்தி செய்தது. அதனை தொடர்ந்து போக்ஸ்வேகன் போலோ, வெண்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் போன்ற கார்களும் உற்பத்தி தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக இந்தியாவில் தயாரிக்கபட்ட மாடல்களை இந்தியாவிலே விற்பனை செய்து வந்த இந்நிறுவனம், கடந்த 2012ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவிற்கு கார் ஏற்றுமதியை தொடங்கியது. அதனை தொடர்ந்து மெக்சிக்கோ, ஆசியா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா என 50 க்கு மேற்பட்ட நாடுகளில் 4 லட்சத்துக்கு அதிகமான கார்களை இந்த நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

மெக்சிக்கோவில் அதிகம் விற்பனையாகின்ற இந்திய வோக்ஸ்வேகன் கார் என்ற பெருமையை வெண்டோ பெற்றுள்ளது.

மேலும் இந்தியாவில் தனது உற்பத்தி திறனை அதிகரிக்க, புதிய இந்தியா 2.0 திட்டங்களுக்கான முதலீட்டின் ஒரு பகுதியாக ரூ.8,000 கோடியை அந்நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.

Exit mobile version