Automobile Tamilan

டுகாட்டி விற்பனை திட்டத்தை கைவிட்ட வோல்ஸ்வேகன் குழுமம்

வோல்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் ஆடி கார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இத்தாலி டுகாட்டி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை விற்பனை செய்யும் எண்ணத்தை கைவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டுகாட்டி விற்பனை

ராயல் என்ஃபீல்ட், பஜாஜ், ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆடி நிறுவனத்தின் கீழ் செயல்படும் டுகாட்டி பைக் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்நிறுவனத்தை விற்பனை செய்யும் எண்ணத்தை கைவிடுவதாக டுகாட்டி தொழிற்சங்க தலைவர் சமீபத்தில் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஆடி நிறுவனம் கைப்பற்றியதை தொடர்ந்து சிறப்பான வளர்ச்சி பெற்று வந்த இந்நிறுவனத்தின் வோல்ஸ்வேகன் குழுமம் மாசு உமிழ்வு பிரச்சனையில் சிக்கிய காரணத்தால் 25 பில்லியன் யூரோ மதிப்பீல் இழப்பீட்டை சந்தித்து வரும் நிலையில், மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது.

இந்த மாத இறுதிக்குள் விற்பனை நிறைவடையும், என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டுகாட்டி பைக் நிறுவனத்தின் ஊழியர்கள் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பினை பதிவு செய்த காரணத்தால் விற்பனை எண்ணத்தை கைவிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

Exit mobile version