தரத்தால் தரணியை வென்ற டொயோட்டா மோட்டார்

உலகின் மொத்த ஆட்டோமொபைல் சந்தையில் டொயோட்டா நிறுவனத்துக்கு தனியான பாரம்பரியம் என்றால் அதன் தரம், உலகில் 49 நாடுகளில் டொயோட்டா கார் அதிகம் விற்பனை செய்யப்படுகின்ற மாடலாக விளங்குகின்றது.

toyota innova touring sport front

டொயோட்டா மோட்டார்

இதுகுறித்து ஆய்வறிக்கை ஒன்றை இங்கிலாந்தின் regtransfers இணையதளம் வெளய்யிட்டுள்ளது. மிகவும் தரமான மற்றும் கட்டுறுதிமிக்க கார்களை வடிவமைப்பத்தில் பிரசத்தி பெற்று விளங்கும் டொயோட்டா நிறுவனம் ஜப்பான்,ஆஸ்திரேலியா, அரபு அமீரகம், சிங்கப்பூர், பாகிஸ்தான்,இந்தோனேசியா, உள்ளிட்ட மொத்தம் 49 நாடுகளில் முதலிடத்தில் உள்ளது.

அதனை தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் குழுமம் 14 நாடுகளில் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக ஜெர்மனி, நார்வே பெல்ஜியம் போன்ற நாடுகளாகும்.

VW Tiguan suv

மூன்றாவது இடத்தில் ஃபோர்டு, அதனை தொடர்ந்து ரெனால்ட்,ஸ்கோடா, டைக்கா மற்றும் ஃபியட் போன்ற யாடுகளும் உள்ளன. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சுசுகி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. மேலும் முழுமையான நாடுகள் வாரியான விபரத்துக்கு படத்தை காணலாம்.

top Car Manufacturers Badges list country wise infographic