கிளாசிக் லெஜெண்ட்ஸ் கீழ் செயல்படுகின்ற ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார்சைக்கிள் மாடல்கள் 350ccக்கு குறைந்த என்ஜின் பெற்றுள்ளதால் அதிகபட்சமாக ரூ.16,930 வரை பெராக் மோட்டார்சைக்கிள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜாவா மற்றும் யெஸ்டி நிறுவனங்கள் 334cc என்ஜின் பயன்படுத்திக் கொள்வதனால் விலை குறைக்கப்பட உள்ளது. ஆனால் இந்நிறுவனத்தின் பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 பைக் விலை உயர்த்தப்பட உள்ளது.
யெஸ்டி பைக்குகள் ரூ.16,404 முதல் ரூ.16,789 வரை குறைக்கப்பட உள்ளது.
Model | Old Price | New Price | GST Benefits |
---|---|---|---|
Roadster | ₹ 2,09,969 | ₹ 1,93,565 | ₹ 16,404 |
Adventure | ₹ 2,14,900 | ₹ 1,98,111 | ₹ 16,789 |
Scrambler | ₹ 2,11,900 | ₹ 1,95,345 | ₹ 16,555 |
ஜாவா பைக்குகள் ஜிஎஸ்டி விலை குறைப்பு பட்டியல்
Model | Old Price | New Price | GST Benefits |
---|---|---|---|
Jawa 42 | ₹ 1,72,942 | ₹ 1,59,431 | ₹ 13,511 |
Jawa 350 | ₹ 1,98,950 | ₹ 1,83,407 | ₹ 15,543 |
Jawa 42 Bobber | ₹ 2,09,500 | ₹ 1,93,133 | ₹ 16,367 |
Jawa 42 FJ | ₹ 2,10,142 | ₹ 1,93,725 | ₹ 16,417 |
Jawa Perak | ₹ 2,16,705 | ₹ 1,99,775 | ₹ 16,930 |
புதிய ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதனால் வரும் செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. குறிப்பாக, மஹிந்திரா, ரெனால்ட், டொயோட்டா, டாடா உள்ளிட்ட பல்வேறு நிறுவங்கள் சலுகையை அறிவிக்க துவங்கியுள்ளது.