2016ல் 1.14 பில்லியன் யூரோ வருமானத்தை ஈட்டிய கேடிஎம் பைக்

இந்தியாவின் பிரிமியம் மோட்டார் சைக்கிள் சந்தையின் விற்பனை எண்ணிக்கை அபரிதமான வளர்ச்சியை எட்டி வரும் நிலையில் கேடிஎம் பைக் நிறுவனம் இந்தியாவில் 1 லட்சம் பைக்குகளை விற்பனையை கடந்த புதிய சாதனையை படைத்துள்ளது.

 கேடிஎம் பைக்

சர்வதேச அரங்கில் கேடிஎம் பைக் நிறுவனம் 2016 ஆம் ஆண்டில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பைக்குகளை விற்பனை செய்து 1.14 பில்லியன் யூரோ மதிப்பிலான வருமானத்தை ஈட்டியுள்ளது. கேடிஎம் நிறுவனத்தின் முக்கிய பங்குதார்களில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முதன்மையானதாகும்.

இந்தியாவின் விற்பனை விபரத்தை காட்டும் இந்த வரை படத்தை கவனியுங்கள்.. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தொகுக்கப்பட்டுள்ள இந்த விவரக்குறிப்பில் சராரியாக வருடத்திற்கு 50 சதவீத வளர்ச்சியை கேடிஎம் பதிவு செய்து வருகின்றது. நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 37,000 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவின் பிரிமியம் சந்தையில் 80 சதவீத பங்களிப்பினை பஜாஜ் கேடிஎம் பெற்றுள்ளதை விளக்கும் விவர படமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தே ஹார்லி டேவிட்சன்  , பெனெல்லி ,ஹாயசங் போன்ற நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.

2012 ஆம் ஆண்டில் 32 டீலர்கள் வாயிலாக விற்பனைக்கு தொடங்கப்பட்ட கேடிஎம் பைக்குகள் தற்பொழுது 325க்கு மேற்பட்ட சேவையை மையங்களுடன் உள்ள நிலையில் இந்தாண்டின் இறுதிக்குள் 500 டீலர்களாக எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளதால்பல்வேறு சிறிய நகரங்களில் கேடிஎம் பிராண்டு பைக்குகள் நேரடியாக விற்பனைக்கு கிடைக்கும்.

வருகின்ற 2017-2018 ஆம் நிதி ஆண்டில் 1 லட்சம் கேடிஎம் பைக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்னைக்கப்பட்டுள்ளதால் அமெரிக்காவின் கேடிஎம் விற்பனை எண்ணிக்கையை இந்தியா பிரிவு பின்னுக்கு தள்ளும் வாய்ப்புகள் உருவாகும்.

சமீபத்தில் 2017 கேடிஎம் 200 ட்யூக் , கேடிஎம் 250 ட்யூக் மற்றும் 2017 கேடிஎம் 390 ட்யூக் பைக்குகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிலே பெரும்பாலான பாகங்களை தயிராக்கப்படுவதனாலே இந்த பைக்குகள் மிக சவலான விலையில் பல்வேறு உயர்தர வசதிகளை கொண்ட மாடல்களாக விளங்குகின்றது.

 

Exit mobile version