இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் பயணிகள் வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் ஹாரியர்.இவி மாடலை தொடர்ந்து Curvv EV மற்றும் Nexon EVகளுக்கு (15 ஆண்டுகள் ) வாழ்நாள் பேட்டரி உத்தரவாதத்தை அறிவித்துள்ளது.
குறிப்பாக, மஹிந்திரா நிறுவனம் வாழ்நாள் வாரண்டி அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து டாடா மோட்டாருசின் முயற்சியாக புதிய வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே கர்வ்.இவி, நெக்ஸான்.இவி என இரண்டிலும் 45 kWh HV பேட்டரிக்கு உத்தரவாதம் வழங்கப்படுகின்றது.
HV பேட்டரி உத்தரவாதத்தின் நன்மையைப் பற்றிப் பேசுகையில், டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட்டின் தலைமை வணிக அதிகாரி திரு. விவேக் ஸ்ரீவத்சா, “பிரீமியம் EV தொழில்நுட்பத்தை பொது வெளிப்படுத்துவதன் மூலம், இந்தியாவின் EV விற்பனை எண்ணிக்கை அதிவேக வளர்ச்சியை முன்னேற்றுவதில் நாங்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளோம். இந்த வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணிகளில் ஒன்று, கவலையற்ற உரிமை அனுபவத்திற்காக வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் திறன் ஆகும்.
இன்று, Curvv.ev மற்றும் Nexon.ev 45 kWh என அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வாழ்நாள் HV பேட்டரி உத்தரவாத தீர்வை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த உணர்வை மேலும் விரிவுபடுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்த முன்னோடியில்லாத உத்தரவாதத்தை வழங்குவதன் மூலம், ஒவ்வொரு TATA.ev வாங்குபவருக்கும் உண்மையிலேயே கவலையற்ற, எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள உரிமைப் பயணத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
கூடுதலாக டாடா கர்வ்.இவி, நெக்ஸான்.இவி வாடிக்கையாளர்கள் மீண்டும் டாடா இவி வாகனங்களை வாங்கும் பொழுது ரூ.50,000 வரை லாயல்டி போனஸ் திட்டத்தையும் கூடுதலாக