இந்திய சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் மஹிந்திராவின் BE6 அடிப்படையிலான சிறப்பு பேட்மேன் எடிசனை 000-999 யூனிட்டுகளுக்கான முன்பதிவு துவங்கிய 2.25 நிமிடங்களில் விற்று தீர்க்கப்பட்டத்தாக அறிவித்துள்ளது.
குறிப்பாக சர்வதேச பிரசத்தி பெற்ற நாயகர்களில் ஒன்றான பேட்மேனை கொண்டாடும் வகையில் கருமை நிறத்தை பெற்று பல்வேறு இடங்களில் பேட்மேன் லோகோ பெற்று Pack Three வேரியண்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்டீரியரில் சில இடங்களில் கோல்டன் நிறத்தை சேர்த்து மிகவும் ரசனையாக வடிவமைத்துள்ளது.
வழக்கமான மாடலை விட ரூ.89,000 கூடுதல் விலையில் அமைந்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு பணத்துக்கு ஏற்ற மதிப்பை வழங்கும் வகையில் பேட்மேன் லோகோ, ஸ்டிக்கிரங் சேர்க்கப்பட்டுள்ளது. இன்றைக்கு முன்பதிவு நிறைவுற்றதால் டெலிவரி செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.