Site icon Automobile Tamilan

மஹிந்திரா இ-ஆல்ஃபா மினி எலக்ட்ரிக் ரிக்‌ஷா விற்பனைக்கு அறிமுகம்

சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான ஆட்டோ ரிக்‌ஷா மாடலை மஹிந்திரா நிறுவனம் மஹிந்திரா இ ஆல்ஃபா மினி எலக்ட்ரிக் ரிக்‌ஷா ரூ.1.12 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்திரா இ-ஆல்ஃபா மினி எலக்ட்ரிக் ரிக்‌ஷா

மணிக்கு 25 கிமீ வேகத்தில் இயங்கும் வகையிலான மஹிந்திரா இ-ஆல்ஃபா மினி ரிக்‌ஷாவில் உள்ள 120 Ah பேட்டரி பெற்றதாக சக்திவாய்ந்த 1000 W மோட்டார் பொருத்தப்பட்டு உள்ள இந்த மாடலின் முழுமையான சிங்கிள் சார்ஜில் 85 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாகும்.

4+1 இருக்கை ஆப்ஷனை பெற்றதாக கிடைக்கின்ற இந்த மாடலில் மிக சிறப்பான முறையில் 1 லட்சம் கிலோமீட்டர் வரை பல்வேறு காலநிலை சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த பேட்டரி ரிக்‌ஷா மாடல்கள் முதற்கட்டமாக டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் உள்ள டீலர்களிடம் கிடைக்க தொடங்கியுள்ள இ-ஆல்ஃபா மினி கோல்கத்தா, லக்னோ போன்ற இடங்களில் அடுத்த சில மாதங்களிலும் , நாடு முழுவதும் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

மஹிந்திரா ஹரித்வார் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள இந்த மாடல்கள் முதற்கட்டமாக 1000 அலகுகள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் விற்பனைக்கு வரும்போது உற்பத்தி எண்ணிக்கை 5000 வரை எட்டும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

2030 ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

Exit mobile version