Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

ஆகஸ்ட் 15.., மஹிந்திரா ஓஜா டிராக்டர் அறிமுகம்

By MR.Durai
Last updated: 1,June 2023
Share
1 Min Read
SHARE

mahindra oja coming soon

சர்வதேச இலகுரக டிராக்டர் மாடலாக விற்பனைக்கு மஹிந்திரா ஓஜா ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. உலகளாவிய K2 பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள ஓஜா சப்-காம்பாக்ட் 20-25hp , காம்பாக்ட் (21-30hp), சிறிய பயன்பாடு (26-40hp) மற்றும் பெரிய பயன்பாடு (45-70hp) ஆகியவற்றில் டிராக்டர்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 பிரிவுகளில் 40 மாடல்களுடன் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 4 சந்தைகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, பிரேத்தியேகமாக மிட்சுபிஷி மஹிந்திரா அக்ரிகல்ச்சர் மெஷினரி, ஜப்பான் மற்றும் சென்னையில் உள்ள மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தின் பொறியியல் குழு, மஹிந்திராவின் ஆட்டோ மற்றும் பண்ணை துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

Mahindra OJA Tractors

Oja டிராக்டர்கள் 20 ஹெச்பி முதல் 70 ஹெச்பி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேலும் இந்த ஆண்டு முதல் அடுத்த மூன்று நிதியாண்டுகளில் வெளியிடப்படும். ஒவ்வொரு மஹிந்திரா ஓஜா டிராக்டரும் நிறுவனத்தின் “ முதல் தரமான தொழில்நுட்ப அம்சங்களை” கொண்டிருக்கும்.

தெலுங்கானாவில் உள்ள மஹிந்திரா டிராக்டர் ஜஹீராபாத் ஆலையில் 1,087 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இரண்டு ஷிப்ட் முறையில் ஆண்டுக்கு 100,000 டிராக்டர்களுக்கு மேல் தயாரிக்கும் திறனை கொண்டுள்ளது. 1,500க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஆலையில் யுவோ மற்றும் ஜிவோ டிராக்டர் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிளஸ் சீரிஸ் டிராக்டர்களும் உற்பத்தி செய்யப்படுகின்றது.

மஹிந்திரா டிராக்டர் நிறுவனம், உலகின் முன்னணி டிராக்டர் தயாரிப்பாளராக விளங்குகின்றது.

2025 BMW 2 Series Gran Coupe car
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி
எத்தனால் கலந்த E20 பெட்ரோல் ஆபத்தில் கார்கள், பைக்குகள் ..!
பியாஜியோ அபே e-சிட்டி அல்டரா, FX மேக்ஸ் எலக்ட்ரிக் வெளியானது
TAGGED:Mahindra OjaTractor
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
2025 yamaha rayzr 125 fi hybrid
Yamaha
யமஹா ரே ZR 125 & ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம்,
சூப்பர் மீட்டியோர் 650
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 tvs jupiter ivory brown
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved