Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

FY24-25ல் இந்தியாவின் முதன்மையான கார் மாருதி சுசூகி வேகன் ஆர்

By நிவின் கார்த்தி - Editor
Last updated: 3,April 2025
Share
SHARE

இந்தியாவின் நெ.1 கார்

டால்பாய் ஹேட்ச்பேக் என அறியப்படுகின்ற மாருதி சுசூகியின் பிரசத்தி பெற்ற வேகன் ஆர் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 2024-2025 ஆம் நிதியாண்டில் 1,98,451 கடந்து நாட்டின் முதன்மையான கார் மாடலாக தொடர்ந்து நான்காவது முறையாக பதிவு செய்துள்ளது.

கடந்த 2024 காலாண்டர் வருடத்தின் படி டாடாவின் பஞ்ச் முதலிடத்தை கைப்பற்றினாலும், நிதியாண்டின் படி தொடர்ந்து FY 22, 23, 24 மற்றும் 25 என நான்காவது ஆண்டாக மாருதி வேகன் ஆர் கைப்பற்றியுள்ளது.

Maruti Wagon R

கடந்த 25 ஆண்டுகளாக சந்தையில் உள்ள மாருதி வேகன் ஆர் ஹேட்ச்பேக் காரின் விற்பனை எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக தற்பொழுது வரை 33,73,884 கடந்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற ஹேட்ச்பேக் கார்களில் பிரபலமாக உள்ள வேகன் ஆரில் 1.2 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இரு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் உள்ளது.

சாதனை குறித்து மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைத் துறையின் மூத்த நிர்வாக அதிகாரி திரு. பார்த்தோ பானர்ஜி கூறுகையில்,

“இந்திய வாகன சந்தையில் வேகன்-ஆர் காரின் தொடர்ச்சியான தலைமை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவான வாடிக்கையாளர் நம்பிக்கையையும், ஒப்பிடமுடியாத மதிப்பினை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. புதுமை மற்றும் வாடிக்கையாளளுக்காக நாங்கள் கவனம் செலுத்துவது, வேகன்-ஆர் இந்திய குடும்பங்களுக்கான சிறந்த தேர்வாக இருப்பதை உறுதி செய்துள்ளது.

உண்மையில், ஒவ்வொரு புதிய 4 வேகன்-ஆர் வாடிக்கையாளர்களில் ஒருவர் இந்தியாவின் அதிகம் விற்பனையாகின்ற காரை மீண்டும் வாங்குகின்றனர், இது அதன் பரவலான ஈர்ப்பையும், எங்கள் வாடிக்கையாளர்கள் பிராண்டில் வைத்திருக்கும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.”

மேலும் அவர் கூறுகையில்,

ஹேட்ச்பேக்குகள் இந்திய ஆட்டோமொபைல் துறையின் ஒருங்கிணைந்த தூணாகும். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அதிக விற்பனையாகும் வாகனமாக தனது நிலையைப் பாதுகாத்து வரும் வேகன்ஆரின் நிலையான தலைமை, நீண்டகால தொழில்துறை வளர்ச்சியை உந்துவதில் இந்தப் பிரிவின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எதிர்காலத்தில், ஒவ்வொரு இந்தியரின் இல்லத்திற்கான மகிழ்ச்சியைப் பரப்புவதில் இந்தப் பிரிவு தொடர்ந்து  இருக்கும்.” என குறிப்பிட்டுள்ளார்.

சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரு விதமாக விற்பனை செய்யப்படுகின்ற வேகன் ஆர் காரனை 5 வது தலைமுறை Heartect பிளாட்ஃபாரத்தில் வடிவமைத்து ஹை டென்சில் ஸ்டீல் பெற்ற கட்டுமானத்துடன் எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் விநியோகம் (EBD) உடன் கூடிய ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் போன்ற பாதுகாப்பு  இரண்டு ஏர்பேக்குகளை கொண்டுள்ளது.

2025 BMW 2 Series Gran Coupe car
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி
எத்தனால் கலந்த E20 பெட்ரோல் ஆபத்தில் கார்கள், பைக்குகள் ..!
பியாஜியோ அபே e-சிட்டி அல்டரா, FX மேக்ஸ் எலக்ட்ரிக் வெளியானது
TAGGED:Maruti Suzuki WagonR
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஓலா S1 Pro
Ola Electric
ஓலா S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 suzuki access 125
Suzuki
2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
New Hero Glamour X 125 on road price
Hero Motocorp
ஹீரோ கிளாமர் எக்ஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
hero hf deluxe pro on road price
Hero Motocorp
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved